ரெயில்வே அமைச்சகம்

பைசாகி கொண்டாட்டத்தின்போது சீக்கியர்களின் புனிதத் தல சுற்றுலாவிற்கு இந்திய ரயில்வே ஏற்பாடு

Posted On: 21 FEB 2023 4:06PM by PIB Chennai

ரயில்வே அமைச்சகம் இந்தியாவின் கலாச்சார மற்றும் மத பாரம்பரியத்தை பாரத் கௌரவ் சுற்றுலா ரயில்கள் மூலம் பிரபலப்படுத்தி வருகிறது. இந்த சுற்றுலா ரயில்கள் நமது மகத்தான தேசத்தின் கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு பிரபலமான கருப்பொருள் அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்திய ரயில்வே பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலுடன் சீக்கியர்களுக்கென 'குரு கிரிப யாத்ராவை' வரும்  ஏப்ரல் மாதத்தில் தொடங்குகிறது. இந்தப் பண்டிகை வட இந்தியாவில் பைசாகி மாதமாகக் கொண்டாடப்படுகிறது. பல்வேறு துறைகளுடனான விரிவான ஆலோசனைக்குப் பிறகு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள சீக்கியர்களின் புனிதத் தலங்களுக்கு இந்திய ரயில்வே இந்த  சிறப்பான சுற்றுலாவை முன்னெடுத்துள்ளது.

11 நாட்கள் / 10 இரவுகள் கொண்ட இந்த சுற்றுலா ஏப்ரல் 5, 2023 அன்று லக்னோவில் தொடங்கி ஏப்ரல் 15, 2023 அன்று முடிவடையும். இந்தப் புனித பயணத்தின் போது, ஐந்து புனித குருத்வாராக்கள் உள்பட மிகவும் பிரபலமான ஆன்மிகத் தலங்களுக்கு பக்தர்கள்/  சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள். னந்த்பூர் சாஹிப்பில் உள்ள ஸ்ரீ கேஸ்கர் சாஹிப் குருத்வாரா & விராசத்-இ-கல்சா, கிராத்பூர் சாஹிப்பில் உள்ள குருத்வாரா ஸ்ரீ பாதல்புரி சாஹிப், சிர்ஹிந்தில் உள்ள குருத்வாரா ஸ்ரீ ஃபதேகர் சாஹிப், ஸ்ரீ அகல் தக்த் சாஹிப்பில் உள்ள ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப், ஸ்ரீ அகல் தக்த் சாஹிப் மற்றும் ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப், ஸ்ரீ அம்ரித்ஸ் சாஹிப் நான்டெட்டில் உள்ள ஸ்ரீ ஹஸூர் சாஹிப், பிதாரில் உள்ள குருத்வாரா ஸ்ரீ குருநானக் ஜிரா சாஹிப் மற்றும் பாட்னாவில் உள்ள குருத்வாரா ஸ்ரீ ஹர்மந்தர்ஜி சாஹிப் ஆகிய புனிதத் தல பயணங்களை இந்த சுற்றுலா உள்ளடக்கியுள்ளது.

Golden Temple - Architecture, Attractions, Timings & How to Reach

 

 இந்த சுற்றுலாவுக்காக 9 ஸ்லீப்பர் கோச், 3ம் வகுப்பு ஏசி - 1, 2ம் வகுப்பு ஏசி - 1 ஆகியவற்றைக்  கொண்ட ரயிலை ஐஆர்சிடிசி இயக்கும். இந்த சுற்றுலா 3 வகையில் இயக்கப்பட உள்ளது. பயணிகளுக்கு சிறப்பான அனுபவத்தை தரும் வகையில்உணவு, தங்குமிடம், போக்குவரத்து வசதிகள், பயணக் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை இந்த சுற்றுலா கொண்டிருக்கும்.

மேலும் லங்கர்கள் எனப்படும் முக்கிய குருத்வாராக்களில் உள்ள சமுதாய சமையலறைகளில் பங்கேற்கவும் விருப்பத் தேர்வு வழங்கப்படும்.

பயணிகளை ஈர்ப்பதற்காக மலிவான கட்டணத்தை ஐஆர்சிடிசி நிர்ணயித்துள்ளது. செழுமையான மத மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் வழியில், இந்த ஆன்மிகப் பயணத்தில் இணைய சீக்கியர்களை  வரவேற்க இந்திய ரயில்வே தயாராக உள்ளது.

********

AP/TV/KRS



(Release ID: 1901126) Visitor Counter : 192