இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
ஜி20 அமைப்பின் இளைஞர் 20 பணிக் குழுவின் கீழ் ஜனநாயகம் மற்றும் ஆளுகையில் இளைஞர்களின் ஆற்றல் குறித்த பயிலரங்கு
प्रविष्टि तिथि:
21 FEB 2023 11:28AM by PIB Chennai
ஜனநாயகம் மற்றும் ஆளுகையில் இளைஞர்களின் ஆற்றலை வெளிப்படுத்தும் முயற்சியாக மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்துடன் இணைந்து ஸ்ரீ ராம் வணிகக் கல்லூரியின் சர்வதேச திட்ட அலுவலகம், பிப்ரவரி 22-ஆம் தேதி பயிலரங்கு ஒன்றை நடத்த உள்ளது. ஜி20 அமைப்பின் இளைஞர் 20 பணிக்குழுவின் செயல்பாடுகளின் ஓர் அங்கமாக ‘பகிரப்பட்ட எதிர்காலம்: ஜனநாயகம் மற்றும் ஆளுகையில் இளைஞர்கள்' என்ற தலைப்பிலான இந்தப் பயிலரங்கு நடைபெறும்.

மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் இளைஞர் விவகாரங்கள் துறை செயலாளர் திருமிகு மீதா ராஜீவ்லோசன் பயிலரங்கில் கலந்து கொள்வார்.
டிஜிட்டல் இந்தியா, மாணவர்களை மையமாகக் கொண்ட ஆளுகை மற்றும் கொள்கைக் துறை ஆகிய தலைப்புகளில் கவனம் செலுத்தப்படும். தில்லி தேசிய தலைநகர் பகுதியைச் சேர்ந்த தொழில்முனைவோர் இந்தப் பயிலரங்கில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் படிக்கும் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் காணொலி வாயிலாக இணைவார்கள்.
***
(Release ID: 1900944)
AP/RB/KRS
(रिलीज़ आईडी: 1901013)
आगंतुक पटल : 202