பிரதமர் அலுவலகம்

இந்தியா மற்றும் சிங்கப்பூர் பிரதமர்கள் முன்னிலையில் இருநாடுகளுக்கு இடையேயான நிகழ்நேர பணப்பரிமாற்ற முறை இணைப்பு பிப்ரவரி 21-ம் தேதி தொடங்கிவைப்பு


இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற முறை மற்றும் சிங்கப்பூரின் பேநவ் எல்லைதாண்டிய இணைப்பு சேவைகள் தொடங்கப்பட உள்ளது

இந்த இரண்டு பணப்பரிமாற்ற முறைகளை இணைப்பதன் மூலம் வேகமாக, சிக்கனமாக பணப்பரிமாற்றம் செய்யமுடியும்

சிங்கப்பூரில் உள்ள இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள சிங்கப்பூர் வாழ் மக்கள் ஆகியோருக்கு பணப்பரிமாற்றத்திற்கு உதவிகரமாக அமையும்

Posted On: 20 FEB 2023 12:52PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, சிங்கப்பூர் பிரதமர் திரு லீ சியன் லூங் ஆகியோர் முன்னிலையில் இருநாடுகளுக்கு இடையேயான எல்லைதாண்டிய இணைப்புச் சேவைகளான இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற முறை மற்றும் சிங்கப்பூரின் பேநவ் ஆகியவற்றை பிப்ரவரி 21, 2023 காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைக்கப்படுகிறது. இந்த சேவையை இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் திரு சக்தி காந்ததாஸ் மற்றும் சிங்கப்பூர், நிதி ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் திரு ரவி மேனன் ஆகியோர் தொடங்கிவைக்கின்றனர்.

பொருளாதாரத்துடன் கூடிய தொழில்நுட்பப் புத்தாக்க நடவடிக்கைகள் முன்னேறிய  நாடுகள் மத்தியில் இந்தியாவும் மிக வேகமாக வளர்ச்சிப் பெற்று வருகிறது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், டிஜிட்டல் முறையிலான  பணப்பரிவர்த்தனை உள்கட்டமைப்பு வசதிகளுக்கு உலக அளவிலான பங்கேற்பை உறுதி செய்து வருகிறது. பிரதமரின் தொலைநோக்குப்பார்வையின் முக்கிய அம்சமாக, ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற முறையின்  பயன்பாடுகளை இந்தியாவோடு வரையறுத்துக் கொள்ளாமல் மற்ற நாடுகளும் பெறவேண்டும் என்பதாகும். இந்த இரண்டு பணப்பரிமாற்ற முறைகளை இணைப்பதன் மூலம் இரு நாடுகளைச் சேர்ந்த மக்கள் வேகமாகவும், சிக்கனமாகவும் எல்லைதாண்டிய பணப்பரிவர்த்தனைகளை செய்யமுடியும்.  மேலும், சிங்கப்பூரில் உள்ள இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள், மாணவர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள சிங்கப்பூர் வாழ் மக்கள் ஆகியோர் உடனடியாக குறைந்த செலவில் பணப்பரிமாற்றம் செய்ய முடியும்.

***

AP/GS/KPG/PK

 



(Release ID: 1900751) Visitor Counter : 215