இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

இரண்டாவது தரவரிசை தொடரில் பங்கேற்க 27 மல்யுத்த வீரர்களை கொண்ட அணிக்கு மேற்பார்வைகுழு அனுமதி அளித்துள்ளது

Posted On: 20 FEB 2023 12:39PM by PIB Chennai

எகிப்தில் நடைபெறவுள்ள 2வது தரவரிசையான இப்ராஹிம் முஸ்தபா போட்டித்தொடரில் பங்கேற்க, 27 மல்யுத்த வீரர்கள் உட்பட 43 பேர் கொண்ட அணிக்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் மேற்பார்வைகுழு அனுமதி அளித்துள்ளது.

எகிப்து நாட்டின் அலெக்ஸாண்டிரியா நகரில் இப்போட்டி பிப்ரவரி 23ம் தேதி தொடங்கி 26ம் தேதிவரை நடைபெறவுள்ளது. சீனியர் ஆசிய சாம்பியன்ஷிப்  2023, சீனியர் உலக சாம்பியன்ஷிப் 2023 ஆகிய போட்டித் தொடர்களில் பங்கேற்பதற்கான தரவரிசைப்புள்ளிகளை பெறுவதற்கு இப்போட்டி முக்கியமானதாகும்.

9 ஃப்ரி ஸ்டைல் மல்யுத்த வீரர்கள், 8 மகளிர் மல்யுத்த வீரர்கள், பத்து கிரேக்கோ ரோமன் மல்யுத்த வீரர்களுடன் 16 பயிற்சியாளர்கள் மற்றும் துணைப்பணியாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஒலிம்பிக் பதக்கவேட்டை திட்டத்தில் உள்ள அஷு 67 கிலோகிராம், பட்டேரி 65 கிலோகிராம், சுஜித் 65 கிலோகிராம் ஆகிய 3 வீரர்களுடன் 27 மல்யுத்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணலாம் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1900702

                                ***

SRI/IR /JJ/KRS

(Release ID: 1900702)

 



(Release ID: 1900735) Visitor Counter : 157