ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒரு மாத கால தீவிர பாதுகாப்பு இயக்கத்தைக் கடைப்பிடிக்க உள்ளது இந்திய ரயில்வே

Posted On: 19 FEB 2023 3:13PM by PIB Chennai

ரயில் தடம் புரளுதல், ஆபத்தில் சிக்னல் கடந்து செல்லுதல், பிற வகையான விபத்துகளைத் தடுத்தல் போன்ற நடவடிக்கைகளுக்காக  இந்திய ரயில்வே ஒரு மாத கால தீவிர பாதுகாப்பு இயக்கத்தை  இன்று முதல் தொடங்கியுள்ளது. பல்வேறு பிரிவுகள், லாபிகள், பராமரிப்பு மையங்கள், பணித் தளங்கள் போன்றவற்றுக்குச் சென்று, விபத்துகளைத் தடுக்க பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பான செயல்பாட்டு மற்றும் பராமரிப்பு நடைமுறைகளைச் சரிபார்த்து செயல்படுத்துவதை முழுமையாக ஆய்வு செய்யுமாறு  ரயில்வே வாரியம், மண்டல ரயில்வே மற்றும் பிரிவுகளின் மூத்த அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  உதவி லோகோ பைலட்கள் / லோகோ பைலட்டுகள் மூலம் சிக்னலிங் அம்சங்கள் மற்றும் பிரேக்கிங் நடைமுறைகளை கடைப்பிடிக்க முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது; வேகக் கட்டுப்பாடுகளை கடைபிடித்தல்,  டிராக் மெஷின்கள்/டவர் வேகன்களின் ஆபரேட்டர்களின் ஆலோசனைகளை அறிதல்,  பணியிடப் பாதுகாப்பு, குறுக்குவழிகள் போன்றவற்றைத் தடுத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.  செயல்பாடு/பராமரிப்பு/ பணி நடைமுறைகளைக் கவனிக்க, பிரிவு/லாபி/பராமரிப்பு மையங்களின் பணித்தளத்தில் போதுமான நேரத்தை செலவிடுமாறும், களப்பணியாளர்களுக்கு தீர்வுகளை வழங்குமாறும் ,  அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

***

AP  / PKV  / DL


(Release ID: 1900559) Visitor Counter : 223