குடியரசுத் தலைவர் செயலகம்

13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் – குடியரசுத் தலைவர் உத்தரவு

Posted On: 12 FEB 2023 9:16AM by PIB Chennai

ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 13  மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி,

அருணாச்சலப் பிரதேச துணைநிலை ஆளுநராக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி  திரு.கெய்வால்யா த்ரிவிக்ரம் பர்நாயக்-கும், சிக்கிம் மாநில ஆளுநராக திரு.லக்ஷ்மன் பிரசாத் ஆச்சார்யாவும், ஜார்க்கண்ட் ஆளுநராக திரு. சி.பி.ராதாகிருஷ்ணனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், ஹிமாச்சலப் பிரதேச ஆளுநராக திரு. ஷிவ் பிரசாத் ஷுக்லாவும், அஸ்ஸாம் மாநில ஆளுநராக திரு.குலாப் சந்த் கட்டாரியாவும்,  ஆந்திரப் பிரதேச ஆளுநராக ஓய்வு பெற்ற நீதிபதி திரு.எஸ்.அப்துல் நஸீரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநில ஆளுநராக  இருந்த திரு.பிஸ்வ பூஷன் ஹரிசந்தன் சத்தீஸ்கர் மாநில ஆளுநராகவும், சத்தீஸ்கர் மாநில ஆளுநராக இருந்த  சுஷ்ரி அனுஷியா உய்க்கே மணிப்பூர் மாநில ஆளுநராகவும்,  மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த திரு. இல. கணேசன் நாகாலாந்து மாநில ஆளுநராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பீகார் மாநில ஆளுநராக இருந்த திரு.பாகு சவ்ஹான் மேகாலயா ஆளுநராகவும், ஹிமாச்சலப் பிரதேச மாநில ஆளுநராக இருந்த திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பீகார் மாநில ஆளுநராகவும், ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்த திர. ரமேஷ் பயஸ், மகாராஷ்டிர மாநில ஆளுநராகவும், அருணாச்சலப் பிரதேச மாநில ஆளுநராக இருந்த டாக்டர். பி.டி. மிஸ்ரா லடாக் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே மகாராஷ்டிர மாநில ஆளுநர் திரு.பகத் திங் கோஷ்யாரி மற்றும் லடாக் துணைநிலை ஆளுநர் திரு. ராதா கிருஷ்ணன் மாத்தூர்-ரின் ராஜினாமாவை ஏற்பதாகவும் குடியரசுத் தலைவர் அறிவித்துள்ளார்.

***

AP / ES / DL



(Release ID: 1898447) Visitor Counter : 500