இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
அனுராக் தாக்கூர், ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் இணைந்து 3-வது கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளை குல்மார்கில் தொடங்கி வைத்தனர்
Posted On:
10 FEB 2023 6:17PM by PIB Chennai
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர், 3-வது கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளை குல்மார்கில் இன்று தொடங்கி வைத்தார். ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, முக்கிய பிரதிநிதிகள், இளம் வீரர்கள், பயிற்சியாளர்கள், விழாவில் கலந்து கொண்டனர்.
பிரதமர் திரு நரேந்திர மோடி, விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் காணொலி நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்பட்டது. மேலும், வெள்ளைப் புறாக்கள் பறக்கவிடப்பட்டன. பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன.
தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் 40 கேலோ இந்தியா மையங்கள், காணொலிக் காட்சி மூலம் திறந்துவைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், இந்த 40 கேலோ இந்தியா மையங்களை திறந்துவைக்கும் போது பலமான கரவொலிகளை நான் கேட்டேன். பிரதமர் வெளியிட்டுள்ள காணொலி செய்தியில், ஜம்மு காஷ்மீர் பகுதிக்கு விளையாட்டுத்துறைக்கு கடந்த 3 ஆண்டுகளில், மேற்கொள்ளப்பட்ட பணிகள் பாராட்டுக்குரியது என்பதை மேற்கோள் காட்டினார். ஜம்மு காஷ்மீர் விளையாட்டுத் துறைக்கு தேவையான நிதி உதவியை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம், தொடர்ந்து வழங்கி வருகிறது. குளிர்கால விளையாட்டுக்கான ஆற்றல் சார் மையம் இங்கு விரைவில் திறக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பேசுகையில், கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளுக்காக நாடே ஒன்றுபட்டுள்ளது. இந்த விளையாட்டுப் போட்டிகளின் போது, காஷ்மீர் பள்ளத்தாக்கின் இயற்கை அழகு, விருந்தோம்பல் ஆகியவற்றை ஒட்டுமொத்த நாடும் ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது என்று தெரிவித்தார்.
குளிர்காலக் கூட்டத் தொடரில், 29 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களிலிருந்து 1,500 விளையாட்டு வீரர்கள் 11 வகையான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
***
(Release ID: 1898025)
(Release ID: 1898098)
Visitor Counter : 138