ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆன்லைன் வாயிலான உணவை தற்போது வாட்ஸ்-அப் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம்: இந்திய ரயில்வே புதிய சேவையைத் தொடங்கியது

प्रविष्टि तिथि: 06 FEB 2023 1:10PM by PIB Chennai

பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி ரயில் பயணிகள் ஆன்லைன் வாயிலான உணவை தற்போது வாட்ஸ்-அப் தகவல் மூலம் முன்பதிவு செய்யும் சேவையைத் தொடங்கியுள்ளது.

வாடிக்கையாளருக்காக +91-8750001323 என்ற வாட்ஸ்-அப் எண்ணை அறிவித்துள்ளது.

ஆன்லைன் வாயிலான உணவை வாட்ஸ்-அப் மூலம் பெறும் வசதி குறிப்பிட்ட ரயில்களில் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது.

வாடிக்கையாளரின் பின்னூட்டம், கருத்துக்களின் அடிப்படையில், மற்ற ரயில்களிலும் இந்த வசதியை நிறுவனம் வழங்கும்.

www.catering.irctc.co.in மற்றும் அதனுடைய செயலி மூலம் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழக நிறுவனம் மின்னணு வாயிலாக உணவு வழங்குதல் சேவையைத் தொடங்கியது.

ஆன்லைன் மூலம் பயணச்சீட்டை முன்பதிவு செய்த இந்த வாடிக்கையாளருக்கு வாட்ஸ்-அப் எண் அனுப்பி வைக்கப்படும். அதன் மூலம் பயணிகள் தாங்கள் செல்லும் வழியில் உள்ள ரயில் நிலையங்களின் உணவகங்களைத் தேர்வு செய்து தேவையான உணவை முன்பதிவு செய்ய முடியும். 

தற்போது ஐஆர்சிடிசியின் இணையதளம் மற்றும் செயலி வாயிலாக நாள்தோறும் சுமார் 50 ஆயிரம் உணவுகள்  வழங்கப்படுகின்றன.

 

***

AP/IR/RJ/KPG


(रिलीज़ आईडी: 1896613) आगंतुक पटल : 288
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati , Telugu