நிதி அமைச்சகம்

அமிர்த காலத்திற்கான தொலைநோக்குப் பார்வையையும் அதிகாரமளிக்கப்பட்ட மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்திற்கான செயல்திட்டத்தையும் பட்ஜெட் 2023-24 வழங்கியுள்ளது

Posted On: 01 FEB 2023 1:34PM by PIB Chennai

மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த பட்ஜெட் 2023-34, அதிகாரமளிக்கப்பட்ட மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்தை பிரதிபலிக்கும் அமிர்தகால தொலைநோக்குப் பார்வையை கோடிட்டுக் காட்டுகிறது. வளமான அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை அரசு எதிர்நோக்குவதாகவும், தில் வளர்ச்சியின் பயன்கள் அனைத்துப் பகுதிகளையும், அனைத்து குடிமக்களையும் குறிப்பாக இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஷெட்யூல்டு வகுப்பினர், ஷெட்யூல்டு பழங்குடியினரை சென்றடையும் என்று அவர் கூறினார்.

சுயஉதவிக் குழுக்களில் 81 லட்சம் ஊரகப் பெண்களை திரட்டியிருப்பதன் மூலம் தீன்தயாள் அந்த்யோதயா திட்டம் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது என்று அவர் கூறினார். மாபெரும் உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்குவது அல்லது  ஒவ்வொன்றும் பல ஆயிரம் உறுப்பினர்களுடன் கூட்டாகவும், தொழில்முறை ரீதியாக நிர்வகிக்கப்படுவதாகவும்  இருப்பதன் மூலம் பொருளாதார அதிகாரம் அளித்தலின் இரண்டாவது கட்டத்தை அடைய  இந்தக் குழுக்களை பயன்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்தார்.

கச்சாப்பொருட்களை வழங்குவது, சிறந்த வடிவமைப்பு, தரம், அவர்களின் பொருட்களுக்கு குறியீடு செய்தல், சந்தைப்படுத்துதல் ஆகியவற்றின் மூலமும் அவர்களுக்கு உதவி செய்யப்படும் என்றும் கொள்கைகளுக்கு ஆதரவு அளிப்பதன் மூலம் பெரும்பாலான நுகர்வோர் சந்தைகளுக்கு சேவை செய்வதற்கான அவர்களின் செயல்பாடுகளை அதிகரிக்கச் செய்ய முடியும் என்றும் கூறிய அவர், இதன்  மூலம் பல ஸ்டார்ட்அப்-கள், யூனிகார்ன்களாக உயரும் என்று தெரிவித்தார்.

அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற அரசின் தத்துவம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அளிக்கிறது. குறிப்பாக விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஷெட்யூல்டு வகுப்பினர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், பொருளாதார ரீதியில் நலிந்த பிரிவினர், ஆகியோர் உட்படுத்தப்பட்டிருப்பர். உரிமை மறுக்கப்பட்டவர்களுக்கு ஒட்டுமொத்த முன்னுரிமை அளிக்கப்படும். ஜம்மு காஷ்மீர், லடாக், வடகிழக்கு பிராந்தியம் ஆகியவற்றுக்கு நீடித்த கவனம் செலுத்தப்படும். இந்த முயற்சிகளின் மீது, இந்த பட்ஜெட் கட்டமைக்கப்படுகிறது என்பதை திருமதி நிர்மலா சீதாராமன் எடுத்துரைத்தார்.

-------

SMB/KPG/RR

(Release ID: 1895313)



(Release ID: 1895717) Visitor Counter : 235