நிதி அமைச்சகம்

அரசு ஊழியர்களின் திறமைகளை மேம்படுத்தி மக்கள் நலன் சார்ந்த அணுகுமுறையுடன் பணியாற்றுவதற்கான கற்றல் வாய்ப்புகளை வழங்கும் கர்மயோகி இயக்கம்

Posted On: 01 FEB 2023 1:20PM by PIB Chennai

சாமானிய மக்களின் முன்னேற்றம் மற்றும்  நலனுக்காக பாடுபடும் வெளிப்படையான மற்றும் பொறுப்பு வாய்ந்த நிர்வாகத்தை வழங்குவதற்கான அரசின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தும் விதமாக,  சப்தரிஷி எனப்படும் ஏழு முன்னுரிமைகளை கொண்ட பட்ஜெட்டை தாக்கல் செய்து  உரையாற்றிய மத்திய நிதி  அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், மிஷன் கர்மயோகி என்னும் இயக்கத்தை அறிவித்தார்.

 இந்த இயக்கத்தின் கீழ்  மத்திய, மாநில அரசுகளின் ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன", லட்சக்கணக்கான அரசு ஊழியர்களுக்கு அவர்களின் கல்வி மற்றும் திறனை மேம்படுத்துவதற்கான கற்றல் வாய்ப்பை வழங்குவதற்காக  மிஷன் கர்மயோகி முன் முயற்சியை  மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.  

எளிதாக வணிகம்  செய்வதை  மேம்படுத்துவதற்காக   39,000 இணக்கங்கள் குறைக்கப்பட்டு, 3400 சட்ட விதிகள் குற்றமற்றவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன.  இதற்கு ஏதுவாக 42 மத்திய சட்டங்களை திருத்தங்களை அரசு அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில்  செயற்கை நுண்ணறிவை மேம்படுத்த   சிறந்த கல்வி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவுக்கான மூன்று சிறப்பு மையங்கள் அமைக்கப்படும். விவசாயம், சுகாதாரம் மற்றும் நிலையான நகரங்கள் போன்ற பல்வேறு துறைகளில் அதிநவீன பயன்பாடுகள், சிக்கல் தீர்வுகளை உருவாக்கி, அதன் மூலம் பயனுள்ள செயற்கை நுண்ணறிவு சுற்றுச்சூழலை மேம்படுத்தி தரமான மனித ஆற்றலை  ஊக்குவிக்க  நடவடிக்கை எடுக்கப்படும்.

ஸ்டார்ட்-அப்களுக்கான தேசிய தரவு ஆளுமை கொள்கை முன்மொழியப்பட்டுள்ளது.  

வாடிக்கையாளர்களின் தகவல்களை தெரிந்து கொள்ள உதவும் கேஒய்சி செயல்முறை  எளிமைப்படுத்தப்படும்.

டிஜி லாக்கர் சேவை மற்றும் ஆதார் எண்  ஆகியவற்றை அடிப்படை அடையாளமாகப் பயன்படுத்தி,  தனி நபர்களின் அடையாளம், முகவரியை புதுபித்தல் போன்றவற்றுக்கு ஒற்றை நிறுத்த தீர்வு  செயல்படுத்தப்படும்.

***

 

(Release ID: 1895302)

PKV/AG/RR(Release ID: 1895691) Visitor Counter : 193