நிதி அமைச்சகம்

விரிவான சீர்திருத்தங்கள் மற்றும் வலுவான கொள்கைகளில் இந்தியா கவனம் செலுத்தியது, நெருக்கடி காலத்திலும் வலுவாக இருக்க வழி வகுத்தது

Posted On: 01 FEB 2023 1:32PM by PIB Chennai

விரிவான சீர்திருத்தங்கள் மற்றம் வலுவான கொள்கைகளில் நமது கவனமும், மக்கள் ஈடுபாட்டுடன் அனைவரின் முயற்சி மூலமான அமலாக்கமும், தேவைப்படுவோருக்கு உதவி செய்யும் இலக்கும், சிரமமான காலத்தில் சிறப்பாக செயல்பட நமக்கு உதவி செய்துள்ளன என்று மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன்  தெரிவித்துள்ளார்.

 

நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் 2023-24-ஐ தாக்கல் செய்து உரையாற்றிய அவர், பல்வேறு சாதனைகள் காரணமாக இந்தியாவின் மதிப்பு உலக அளவில் உயர்ந்துள்ளது என்றார். உலகத்தரத்தில் தனித்துவமான  டிஜிட்டல் பொது கட்டமைப்பு அதாவது, ஆதார், கோ-வின், யுடிஐ, இணையில்லாத அளவு மற்றும் வேகத்தில் கொவிட் தடுப்பூசி, பருவநிலை தொடர்பான இலக்குகளில் சாதனை, இயற்கைக்கு உகந்த வாழ்க்கைமுறை (லைஃப்) இயக்கம், தேசிய ஹைட்ரஜன் இயக்கம் போன்ற முன்னிலைப் பகுதிகளில் தீவிரமான பங்களிப்பு ஆகியவை இதற்கு காரணம் என்றும் அவர் கூறினார்.

 

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில், 28 மாதங்களுக்கு 80 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு நிலையின்றி உணவு தானியஙகள் வழங்கும் திட்டத்தின் மூலம் எவரும் பசியுடன்  உறங்கச் செல்லாமல் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் உறுதியின் தொடர்ச்சியாக, பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ் அடுத்த ஓராண்டு காலத்திற்கு அனைத்து அந்த்யோதயா மற்றும் முன்னுரிமை குடும்பங்களுக்கு விலையின்றி உணவு தானியம் வழங்கும் திட்டம் 2023 ஜனவரி 1-லிருந்து  அமல்படுத்தப்படுகிறது என்றும் இதற்கு செலவாகும் ரூ.2 லட்சம் கோடியும் மத்திய அரசால் ஏற்கப்படுகிறது என்றும் திருமதி நிர்மலா சீதாராமன் கூறினார்.

------

(Release ID: 1895310)

SMB/KPG/RR(Release ID: 1895683) Visitor Counter : 154