நிதி அமைச்சகம்
தனிநபர் வருமான வரி விதிப்பில் நடுத்தர வர்க்கத்தினருக்கு பெருமளவிற்கு பயனளிக்கும் விதமான அறிவிப்புகள்
Posted On:
01 FEB 2023 12:57PM by PIB Chennai
நம் நாட்டில் கடினமாக உழைக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு பயனளிக்கும் விதமாக, மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரத்துறை அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2023-24–ல் ஐந்து முக்கிய அறிவிப்புகளை வழங்கியுள்ளார். தள்ளுபடி, வரி அமைப்பில் மாற்றம், புதிய வரிவிதிப்பு நடைமுறையில் வரிவிலக்கு நீட்டிப்பு, அதிக கூடுதல் வரிவிகிதத்தை குறைத்தல், அரசுத்துறை நிறுவனங்களை சாராதவர்கள் பெறும் விடுப்புத் தொடர்பான பணமாக்குதல் வரம்பு நீட்டிப்பு போன்றவைகள் தொடர்பான அறிவிப்புகள் உழைக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு கணிசமான முறையில் பயனளிக்கும் வகையில் இந்த அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.
மத்திய அமைச்சரின் முதல் அறிவிப்பில், புதிய வரிவிதிப்பு நடைமுறையில் 7 இலட்சம் ரூபாய் வரை தள்ளுபடி வரம்பை உயர்த்தியிருப்பது முன்மொழியப்பட்டது. அதாவது, புதிய வரிவிதிப்பு நடைமுறையில் தனிநபர் ஆண்டு வருமானம் 7 இலட்சம் ரூபாய் வரை வரிக்கட்ட தேவையில்லை. தற்போது பழைய மற்றும் புதிய வரிவிதிப்பு நடைமுறையில் தனிநபர் ஆண்டு வருமானம் 5 ரூபாய் இலட்சம் வரை வரிக்கட்ட தேவையில்லாத நிலை உள்ளது.
மேலும் இந்தப் புதிய வரிவிதிப்பு நடைமுறை மூலம் அனைத்து வரிக்கட்டுபவர்களுக்கும் மிகப் பெரிய அளவில் ஆறுதலாக அமைந்துள்ளது. 9 இலட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் கொண்ட தனிநபர் 45,000 ரூபாய் வரி கட்டினால் போதும். இது அந்த தனிநபரின் வருமானத்தில் 5 சதவீதம் ஆகும். அந்த தனிநபர் இதுவரையில் அவருடைய வருமானத்தில் 25 சதவீதமான 60,000 ரூபாய் வரி செலுத்தி வருகிறார். அதே போல் ஆண்டு வருமானம் 15 இலட்சம் ரூபாய் பெறும் தனிநபர் 1.5 இலட்சம் ரூபாய் வரியாக கட்டினால் போதும். அது அவருடைய வருமானத்தில் 10 சதவீதமே ஆகும். இதுவரையில் தனிநபர் வரியாக 1,87,500 ரூபாய் கட்டி வருகிறார். தற்போதைய வரிவிகிதத்தில் 20 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது முக்கிய அறிவிப்பு, சம்பளம் பெறுபவர்களுக்கும், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் மிகப் பெரிய அளவிலான ஆறுதல் தரும் வகையில் அமைந்துள்ளது. ஆண்டு வருமானம் 15.5 இலட்சம் ரூபாய் அல்லது கூடுதல் சம்பளமாக பெறுபவர்களுக்கு 52,500 ரூபாய் வரையில் நன்மை தரும்.
மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் தொடர்பான நான்காவது முக்கிய அறிவிப்பில், ஆண்டு வருமானம் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ள தனிநபர்களுக்கான அதிக கூடுதல் வரிவிகிதாசாரத்தைக் குறைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது 37 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
ஐந்தாவது முக்கிய அறிவிப்பின் கீழ் விடுப்புத் தொடர்பான பணமாக்குதல் வரிவிலக்கு வரம்பை நீட்டிப்பு செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதாவது அரசுசாரா நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அரசுத்துறையில் பணிபுரிபவர்களுக்கு நிகராக விடுப்புத் தொடர்பான பணமாக்குதல் ஓய்வு பெறும்போது 25 இலட்சம் ரூபாய் வரையில் வரிவிலக்கு பெற முடியும். இதுவரையில்.3 இலட்சம் ரூபாய் வரையில் மட்டுமே வரிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
AP/GS/GAYATHRI/GK
(Release ID: 1895446)
Visitor Counter : 498