நிதி அமைச்சகம்
பொருளாதார வளர்ச்சிக்கு டிஜிட்டல் உள்கட்டமைப்பின் அணுகல் மற்றும் பரவல்
ஊரக பகுதிகளில் 2015 முதல் 2021 ஆம் ஆண்டு வரை 200% அதிகரிப்பு
Posted On:
31 JAN 2023 1:47PM by PIB Chennai
சமீபத்திய ஆண்டுகளில், நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் டிஜிட்டல் உள்கட்டமைப்பின் பங்கு அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. வரும் ஆண்டுகளில், டிஜிட்டல் உள்கட்டமைப்பின் அணுகல் மற்றும் பரவல் ஆகியவை பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கும் என்று மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வு அறிக்கை 2022 -23யில் கூறியுள்ளார்.
டிஜிட்டல் இந்தியா மூலம் கடந்த 3 ஆண்டுகளில் (2019-21) கிராமப்புறங்களில் அதிக இணைய சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர் . 95.76 மில்லியன் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் 92.81 மில்லியன் பேர் இணைந்துள்ளனர். கொவிட்-19 தொற்றின்போது கிராமப்புற இந்தியாவில் இணைய சந்தாதாரர்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது என்று ஆய்வு விளக்குகிறது. ஆனால் தற்போது 2015 மற்றும் 2021 க்கு இடையில் கிராமப்புற இணைய சந்தாக்களில் 200 சதவீதம் அதிகரித்துள்ளது.
பொருளாதார ஆய்வறிக்கையில், கிராமங்களில் 4G மொபைல் சேவைகளை செறிவூட்டுவதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர, வடகிழக்குப் பிராந்தியம், தீவுப் பகுதியில் விரிவான தொலைத்தொடர்பு மேம்பாட்டுத் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது.
ஆதார் முதன்முதலில் தொடங்கப்பட்ட 2009 ஆம் ஆண்டு முதல் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் பயணம் குறிப்பிடத்தக்க வகையில் இருந்ததாக பொருளாதார ஆய்வு கூறுகிறது. அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் பயன்பாடுகளான ‘MyScheme’ மற்றும் புதிய தலைமுறை ஆளுமைக்கான ஒருங்கிணைந்த மொபைல் பயன்பாடு (UMANG), ‘Bhashini’ மற்றும் பிற பல்வேறு துறைகளில் மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் இணைய-அரசு சேவைகளை குடிமக்கள் அணுக உதவுகிறது.
சுகாதாரம், விவசாயம், ஃபின்டெக், கல்வி மற்றும் திறன் போன்ற துறைகளில் கோவிட்-19 இன் போது அதிகரித்து வரும் டிஜிட்டல் மயமாக்கம், இந்தியாவில் சேவைகளின் டிஜிட்டல் விநியோகம் பொருளாதாரத் துறைகளில் மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1894920
***
(Release ID: 1895171)
Visitor Counter : 338