நிதி அமைச்சகம்
அனைவருக்கும் தரமானக் கல்விக் கிடைப்பதை உறுதி செய்ய அரசு உறுதிபூண்டுள்ளது
Posted On:
31 JAN 2023 1:39PM by PIB Chennai
ஐ நா-வின் நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு (SDG4)-ன் கீழ் 4-வது இலக்காகப் பட்டியலிடப்பட்டுள்ள கல்வியின் தரம் 2030-ம் ஆண்டிற்குள் "உள்ளடக்கிய மற்றும் சம அளவிலான தரமானக் கல்வியை உறுதிசெய்து, வாழ்நாள் முழுவதும் கற்றல் வாய்ப்புகளை அனைவருக்கும் வழங்குவதை" நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் தான் தேசியக் கல்விக் கொள்கை-2020, 21 ஆம் நூற்றாண்டின் முதலாவது கல்விக் கொள்கையாக வகுக்கப்பட்டது, இது நாட்டின் முன்னேற்றம் அடைந்து வரும் பல்வேறு வளர்ச்சிக்கான தேவைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டது. கல்விக்கான கட்டமைப்பின் அனைத்து அம்சங்களையும் திருத்துவதற்கும் மறுசீரமைப்பதற்கும் இந்தக் கொள்கை வழங்கப்பட்டுள்ளது. மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 2022-23-ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
பல்கலைக் கழக மானியக்குழு, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துடன் இணைந்து கல்வி அமைச்சகத்தின் சார்பில் 2022-ம் ஆண்டு ஜூலை ஏழு முதல் ஒன்பதாம் தேதி வரை வாரணாசியில் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று நாள் அகில பாரதிய சிக்ஷா சமாகம் குறித்தும் இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் 300-க்கும் மேற்பட்ட பொது மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், இயக்குநர்கள், கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் இணைந்து புதிய கல்விக் கொள்கை - 2020-ஐ கடந்த இரண்டு ஆண்டுகளில் வெற்றிகரமாக வகுத்த பிறகு நாடு முழுவதும் எவ்வாறு இதனை செயல்படுத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. சிந்தனையைத் தூண்டும் விவாதங்களுக்கு இந்த உச்சிமாநாடு ஒரு தளத்தை வழங்கியது, இது திட்டத்தை செயல்படுத்துவதற்கான வரைபடம் மற்றும் உத்திகளை வெளிப்படுத்தவும், அறிவுசார் பரிமாற்றத்தை வளர்க்கவும், இடைநிலை விவாதங்கள் மூலம் வலைதள அமைப்புக்களை உருவாக்கவும், கல்வி நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தீர்வுகளை வெளிப்படுத்தவும் உதவியது
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1894915
***
(Release ID: 1895144)
Visitor Counter : 176