தேர்தல் ஆணையம்
மேகாலயா, நாகாலாந்து மற்றும் திரிபுரா சட்டப்பேரவை பொதுத் தேர்தல், ஊடகங்களுக்கான கட்டுப்பாடுகள்
Posted On:
28 JAN 2023 9:11AM by PIB Chennai
மேகாலயா, நாகாலாந்து மற்றும் திரிபுரா மாநில சட்டப்பேரவைகளுக்கு பொதுத் தேர்தலை நடத்துவதற்கான அட்டவணை 18.01.2023 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேகாலயா, நாகாலாந்தில் ஒரே கட்டமாக பிப்ரவரி 27-ந்தேதியும், திரிபுராவில் ஒரே கட்டமாக பிப்ரவரி 16-ந்தேதியும் தேர்தல் நடைபெறுகிறது.
இது தொடர்பாக , மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 126 ன்படி அனைத்து ஊடகங்களும் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் பற்றி கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக, தொலைக்காட்சி அல்லது அது போன்ற ஊடகங்கள் மூலம் தேர்தல் விஷயங்களைக் காட்டுவது தடை செய்யப்படுகிறது. வாக்கெடுப்பு முடிவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்துடன் முடிவடையும் நாற்பத்தெட்டு மணிநேரத்தில் பொதுக் கூட்டத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. எனவே அதுபற்றிய செய்திகளை வெளியிடக்கூடாது.
தொலைக்காட்சிகள் மூலம் எந்தவொரு தேர்தல் விஷயத்தையும் பொதுமக்களுக்குக் காட்சிப்படுத்துவது தடை செய்யப்படுகிறது.
இந்த விதிகளை மீறும் எந்தவொரு நபரும் இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டிக்கப்படுவார்.
தேர்தல்களின் போது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் மேற்கண்ட பிரிவு 126 இன் விதிகளை டிவி சேனல்கள் தங்கள் குழு விவாதங்கள் மற்றும் பிற செய்தி மற்றும் நடப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் சில சமயங்களில் மீறுவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு காலகட்டத்தில் , தொலைக்காட்சி மூலம் தேர்தல் விஷயங்களைக் காட்டுவதை, மேற்கூறிய பிரிவு 126 தடைசெய்கிறது என்று தேர்தல் ஆணையம் கடந்த காலத்தில் தெளிவுபடுத்தியுள்ளது. அந்தப் பிரிவில் "தேர்தல் விஷயம்" என்பது தேர்தல் முடிவை பாதிக்கும் அல்லது பாதிக்கும் நோக்கம் கொண்ட அல்லது கணக்கிடப்பட்ட எந்தவொரு விஷயமாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது. பிரிவு 126 இன் மேற்கூறிய விதிகளை மீறினால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
கருத்துக் கணிப்புகளை நடத்துவதையும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கட்டத்தில் அதன் முடிவுகளைப் பரப்புவதையும் 126-வது பிரிவு ஏ தடைசெய்கிறது.
பிரிவு 126-ன் கீழ் வராத காலத்தில், சம்பந்தப்பட்ட டிவி/ரேடியோ/கேபிள்/எஃப்எம் சேனல்கள்/இன்டர்நெட் இணையதளங்கள்/சமூக ஊடக தளங்கள் எந்தவொரு ஒளிபரப்பு/தொலைக்காட்சி தொடர்பான நிகழ்வுகளை நடத்துவதற்கு தேவையான அனுமதிக்கு மாநில/மாவட்டம்/உள்ளூர் அதிகாரிகளை அணுகலாம்.
அனைத்து அச்சு ஊடகங்களின் கவனத்திற்கு, பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா 30.07.2010 தேதியிட்டு வழங்கிய வழிகாட்டுதல்கள் மற்றும் தேர்தலின் போது கடைபிடிக்கப் பின்பற்ற வேண்டிய ‘பத்திரிக்கை நடத்தை விதிமுறைகள்- 2020’ ஆகியவற்றைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன.
*****
PKV / DL
(Release ID: 1894257)
Visitor Counter : 191