தேர்தல் ஆணையம்

13-வது தேசிய வாக்காளர்கள் தினம் ஜனவரி 25, 2023 அன்று கொண்டாடப்படவுள்ளது

Posted On: 24 JAN 2023 3:50PM by PIB Chennai

13-வது தேசிய வாக்காளர்கள் தினத்தை ஜனவரி 25, 2023 அன்று தேர்தல் ஆணையம் கொண்டாடுகிறது.

புதுதில்லியில் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்ச்சிக்கு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தலைமை விருந்தினராக பங்கேற்கவுள்ளார். மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்கவுள்ளார்.

இந்த ஆண்டின் தேசிய வாக்காளர்கள் தினத்திற்கான பொருள் ‘வாக்களிப்பதைப் போன்று வேறில்லை, நான் உறுதியாக வாக்களிக்கிறேன்’ என்பதாகும்.

புதுதில்லியில் நடைபெறும் நிகழ்ச்சியின் போது 2022-ம் ஆண்டுக்கான தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கவுள்ளார்.  தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய மாநில மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு தேசிய விருதுகள் வழங்கப்படும். வாக்காளர்கள் விழிப்புணர்வு தொடர்பாக சிறந்த பங்களிப்பு செய்த அரசுத்துறைகள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு தேசிய விருதுகள் அளிக்கப்படவுள்ளன.

தேசிய வாக்காளர்கள் தினம் தேசிய, மாநில, மாவட்ட தொகுதி மற்றும் வாக்குச்சாவடி அளவில் நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1893268

***

AP/IR/AG/KRS(Release ID: 1893324) Visitor Counter : 721