சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

அவசர கால மருத்துவக் குழுக்களுக்கான தேசிய கட்டமைப்பை உருவாக்குதல் குறித்த கருத்தரங்கத்தில் டாக்டர் மன்சுக் மாண்டவியா உரை

Posted On: 24 JAN 2023 1:23PM by PIB Chennai

அவசர கால மருத்துவக்குழுக்களுக்கான தேசிய கட்டமைப்பை உருவாக்குதல் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கத்திற்கு, புதுதில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் உரையாற்றிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, இயற்கை பேரிடர் காலங்களில் அவசர கால நடவடிக்கைகள் குறித்த இந்தியாவின்  நடைமுறைகளை மற்ற நாடுகளும் பின்பற்றலாம் என்றார்.

அதேநேரத்தில் இந்த விஷயத்தில் உலகளவில் சிறந்த நடைமுறையைக் கற்றுக்கொள்வது இன்றியமையாதது என்று குறிப்பிட்ட அவர்,  கடந்த சில தசாப்பதங்களில்  நிகழ்ந்த இயற்கை பேரிழிவுகளின் போது, நாம் கற்றுக்கொண்டப் பாடங்களை உள்ளடக்கிய தரமான  நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார். 

இந்த கருத்தரங்கம், தேசிய அளிவிலான அவசரகால  மருத்துவக்குழுவின் முன்னெடுப்புகளான, கொள்கைகளை வகுத்தல், பங்களிப்பு, பொறுப்புகள் ஆகியவை குறித்த பங்குதாரர்களின் கருத்துக்களை  ஒருங்கிணைக்கும் முக்கியப்பணியை மேற்கொள்ளும் என்று குறிப்பிட்டார். பேரிழிவு காலங்களின் தேவையை அடையாளம் கண்டு அவற்றை ஒருங்கிணைப்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவதுடன், அவசரகாலங்களில் தேவைப்படும் சுகாதார உதவிகளுக்கு தயாராக இருப்பது குறித்தும், விரிவாக விவாதிக்கப்பட உள்ளதாகவும் மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். 

ஜனவரி 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் சுகாதார செயற்குழுக் கூட்டத்திற்கு பிறகு நடத்தப்படும், முதல் ஆலோசனை கருத்தரங்கம் இதுவாகும்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு ராஜேஷ் பூஷன், கூடுதல் செயலாளர் திரு லாவ் அகர்வால், உள்துறை அமைச்சக கூடுதல் செயலாளர் ஹிதேஷ் குமார் எஸ் மக்வானா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

***

AP/ES/RS/KRS



(Release ID: 1893260) Visitor Counter : 118