பிரதமர் அலுவலகம்
உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் கிடைப்பதற்கு வகை செய்ய வேண்டும் என்ற தலைமை நீதிபதியின் யோசனைக்கு பிரதமர் வரவேற்பு
प्रविष्टि तिथि:
22 JAN 2023 5:05PM by PIB Chennai
உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை பிராந்திய மொழிகளில் வழங்குவது குறித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி திரு டிஒய் சந்திரசூட் தெரிவித்த யோசனையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“அண்மையில் நடைபெற்ற விழா ஒன்றில், தலைமை நீதிபதி திரு டி.ஒய்.சந்திரசூட், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை பிராந்திய மொழிகளில் கிடைக்கச் செய்வதற்காக செயலாற்ற வேண்டியதன் அவசியத்தைப் பற்றி பேசினார். அதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் எனவும் அவர் பரிந்துரைத்தார். இது ஒரு பாராட்டுக்குரிய சிந்தனை ஆகும். இது பலருக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு உதவும்." என்று பிரதமர் கூறியுள்ளார்.
பிரதமர் மேலும் கூறியிருப்பதாவது:
"இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. அவை நமது கலாச்சார உணர்வுகளை பிரதிபலிக்கின்றன. தாய்மொழியில் பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளைப் படிக்கும் வாய்ப்பை வழங்குவது உட்பட இந்திய மொழிகளை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது."
இவ்வாறு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
*****
PKV / PLM / DL
(रिलीज़ आईडी: 1892848)
आगंतुक पटल : 256
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
Urdu
,
English
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Odia
,
Telugu
,
Malayalam