நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

ஜனவரி 1, 2023 அன்று தொடங்கப்பட்ட புதிய ஒருங்கிணைந்த உணவுப்பாதுகாப்பு திட்டத்திற்கு பிரதமரின் ஏழைகள் நல உணவுப் பாதுகாப்பு திட்டம் என்று மத்திய அரசு பெயரிட்டுள்ளது

Posted On: 11 JAN 2023 2:24PM by PIB Chennai

ஜனவரி 1,2023 முதல் ஏழைகள் நல உணவுத் திட்டம் மற்றும் முன்னுரிமை குடும்ப பயனாளிகள் திட்டத்திற்கு இலவச உணவு தானியங்கள்  வழங்குவதற்கு புதிய ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. புதிய திட்டத்திற்கு பிரதமரின் ஏழைகள் நல உணவுப் பாதுகாப்பு திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜனவரி 1, 2023 முதல் அமல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் மூலம் 80 கோடிக்கும் மேற்பட்ட ஏழை மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இத்திட்டத்தை முறையாக செயல்படுத்துவதற்காக உணவு மற்றும் பொது விநியோகத்துறை மற்றும் இந்திய உணவுக்கழக அதிகாரிகள் மாநில அரசு அதிகாரிகளுடன்  வழக்கமாக விவாதித்து வருகின்றனர்.

இத்திட்டத்திற்காக 2023-ல் மத்திய அரசு 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிடவுள்ளது.

***

IR/AG/RJ



(Release ID: 1890300) Visitor Counter : 604