நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம் சுரங்க மண்ணிலிருந்து எம்-சாண்ட் உற்பத்தி செய்ய உள்ளது

Posted On: 10 JAN 2023 1:04PM by PIB Chennai

நிலக்கரி உற்பத்தியில் மினிரத்னா நிறுவனமான நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம் (என்சிஎல்) கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தப்படும் முக்கியப் பொருளான எம்-சாண்ட் உற்பத்தியை தனது அம்லோரி திட்டத்தில் தொடங்க உள்ளது. பன்முக வணிகத்தில் கவனம் செலுத்தும் இந்த நிறுவனம் சீரான சூழல் பாதுகாப்புக்காக சுரங்கப் பணிகளின் போது வெளியேற்றப்படும் மணலை கச்சா பொருளாக பயன்படுத்தி எம்-சாண்ட் உற்பத்தி செய்ய தீர்மானித்துள்ளது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த முன்முயற்சியால் நதிப் படுக்கைகளில் மணல் எடுப்பதால் ஏற்படும் மண் அரிப்பிலிருந்து பாதுகாக்கப்படும். இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மணலின் ஏல நடைமுறை அடுத்த மாதம் முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்சிஎல் நிறுவனம் அதன் 10 திறந்தவெளி சுரங்கங்களில் ஆணடுக்கு 122 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்கிறது.  இந்த பணியின் போது வெளியேற்றப்படும் மணலின் அளவு 410 மில்லியன் கன மீட்டராக உள்ளது. இந்த அளவுக்கான  மண் குவியல் பெருமளவு இடத்தை ஆக்கிரமிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு நாளொன்றுக்கு 1429 கன மீட்டர் கழிவு மணலை பயன்படுத்தி ஆண்டுக்கு 3 லட்சம் கன மீட்டர் எம்-சாண்ட் தயாரிக்க என்சிஎல் திட்டமிட்டுள்ளது.  

***

SMB/RJ/KPG


(Release ID: 1889998) Visitor Counter : 149