பிரதமர் அலுவலகம்

தண்ணீர் குறித்த முதலாவது அகில இந்திய மாநில அமைச்சர்களின் மாநாட்டில் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் உரையாற்றினார்


“அடுத்த 25 ஆண்டுகளுக்கான அமிர்தப் பெருவிழா பயணத்தில் தண்ணீர் தொலைநோக்கு @ 2047 என்பது முக்கியத்துவம் வாய்ந்த பரிணாமம்

“இந்த இயக்கத்துடன் பொது மக்கள் பங்கேற்கும் போது அவர்களும் இந்தப்பணியின் தீவிரத்தன்மையை அறிந்துகொள்ள முடிகிறது”

“தூய்மை பாரத இயக்கத்தில் மக்கள் இணையும் போது பொதுமக்களிடையேயும் உணர்வு வெளிப்படுகிறது”

“நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 அமிர்த நீர்நிலைகள் கட்டப்பட்டு வருகின்றன. 25,000 அமிர்தநீர்நிலைகள் இதுவரை கட்டப்பட்டுள்ளன”

“அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் வழங்குவதற்காக
மாநிலத்தில் நீர்வள இயக்கம் பெரிய வளர்ச்சி அளவீடாக உள்ளது”

“ஒரு துளி அதிக பயிர்” என்ற இயக்கத்தின் கீழ் நாட்டில் 70 லட்சம் ஹெக்டேருக்கும் மேலான நிலப்பரப்பு நுண்ணீர் பாசனத்தின் கீழ் இதுவரை கொண்டுவரப்பட்டுள்ளது”

“அடுத்த ஐந்து ஆண்டுகளில் தண்ணீர் விநியோகம் முதல் தூய்மைப் பணி மற்றும் கழிவு மேலாண்மையை கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்துவதற்கான வழிவகைகளை காணும் செயல்திட்டத்தை கிராமப் பஞ்சாயத்துக்கள் தயாரிக்க வேண்டும்”

“நமது ஆறுகள், நமது நீர்நிலைகள் ஆகியவை ஒட்டுமொத்த தண்ணீர் சுற்றுச்சூழல் முறையி

Posted On: 05 JAN 2023 10:14AM by PIB Chennai

தண்ணீர் குறித்த முதலாவது அகில இந்திய மாநில அமைச்சர்களின் மாநாட்டில் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

தண்ணீர் தொலைநோக்கு @ 2047 என்பது இம்மாநாட்டின் கருப்பொருளாகும். நீடித்த வளர்ச்சி மற்றும் மனித வளர்ச்சிக்காக நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பது குறித்த வழிவகைகளை விவாதிக்க முக்கியக் கொள்கை இயற்றுவோரை ஒருங்கிணைப்பது இம்மாநாட்டின் நோக்கமாகும்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், தண்ணீர் பாதுகாப்புக்காக இந்தியா மேற்கொண்டுள்ள அளப்பரிய பங்களிப்பு குறித்து பேசி, நாட்டின் நீர் வளத்துறை அமைச்சர்களின் முதலாவது அகில இந்திய மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். நமது அரசியலமைப்பில், தண்ணீர் என்ற பொருள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது, நாட்டின் கூட்டு இலக்குகளை அடைமாநில அரசுகளின் நீர் பாதுகாப்புக்கான முயற்சிகள் பெரிதும் உதவும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். அடுத்த 25 ஆண்டுகளுக்கான அமிர்தப் பெருவிழாவின் பயணத்தின் முக்கியமான பரிமாணமாக தண்ணீர் தொலைநோக்கு @ 2047 உள்ளதுஎன்று பிரதமர் குறிப்பிட்டார்.

முழு அரசு' மற்றும் 'முழு நாடு' என்ற தனது தொலைநோக்கை  வலியுறுத்திய பிரதமர், நீர் வள அமைச்சகம், பாசன அமைச்சகம், வேளாண் அமைச்சகம், ஊரக, நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சகம் போன்ற மாநில அரசுகளின் பல்வேறு அமைச்சகங்களுக்கு இடையேயான உரையாடல் அமையும் விதத்தில் அனைத்து மாநிலங்களும்  இருக்க வேண்டியது அவசியமாகும். இந்தத் துறைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடைய தகவல்களும், தரவுகளும் இருந்தால் திட்டமிடலுக்கு உதவி கிடைக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

அரசின் முயற்சியால் மட்டும் வெற்றி கிடைக்காது என்று குறிப்பிட்ட பிரதமர், பொது மற்றும் சமூக அமைப்புகள் மற்றும் சிவில் சமூகங்களின் பங்கு குறித்து தெரிவித்ததுடன், நீர் பாதுகாப்பு தொடர்பான இயக்கங்களில் அதிகளவில் பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டார். பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதன் மூலம் அரசின் பொறுப்புடைமையை குறைக்காது என்றும், அனைத்துப் பொறுப்புகளையும் மக்கள் மீது விதிப்பது அர்த்தமல்ல என்றும் பிரதமர் விளக்கினார். மேலும், இயக்கத்தில் ஈடுபடும் முயற்சிகள் மற்றும் செலவிடப்படும் பணம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதே பொதுமக்களின் பங்கேற்பின் மிகப்பெரிய நன்மையாகும் என்று கூறினார். பொதுமக்கள் ஒரு இயக்கத்தில் இணைந்து செயல்படும் போது,  ​​அவர்கள் அந்தப்பணியின் தீவிரத்தன்மையையும் அறிந்து கொள்கிறார்கள். இதன் காரணமாக, எந்தவொரு திட்டத்திற்கும் அல்லது இயக்கத்திற்கும் பொதுமக்களிடையே உரிமை என்ற உணர்வு ஏற்படுவதாக கூறினார்.

தூய்மை இந்தியா இயக்கத்தின் உதாரணமாகக் கூறிய பிரதமர், “மக்கள் தூய்மை இந்தியா இயக்கத்தில் இணைந்த போது, ​​மக்களிடையே ஓர் உணர்வு ஏற்படுவதாகவும், இந்திய மக்களின் முயற்சிகளுக்குப் பாராட்டும் தெரிவித்தார். அசுத்தங்களை களைவதற்கான ஆதாரங்களை சேகரிப்பது, பல்வேறு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டுவது அல்லது கழிப்பறைகள் கட்டுவது என பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்ததாக கூறினார். ஆனால் அசுத்தம் எங்கேயும் இல்லை என்று மக்கள் முடிவு செய்தபோது இந்த இயக்கத்தின் வெற்றி உறுதிசெய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.  நீர் பாதுகாப்பில் பொது மக்களின் பங்கேற்பு குறித்த எண்ணத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார்.

நீர் விழிப்புணர்வு விழாக்கள் அல்லது’ நீர் விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சிகள் உள்ளூர் அளவில்  நாம் ஏற்பாடு செய்ய முடியும் என்று பிரதமர் கருத்து தெரிவித்தார்.   பள்ளிகளில் பாடத்திட்டம் முதல் செயல்பாடுகள் வரை புதுமையான வழிகள் மூலம் இளைய தலைமுறையினருக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 அமிர்த நீர்நிலைகள் கட்டப்பட்டு வருவதாகவும், அதில் இதுவரை 25 ஆயிரம் அமிர்த நீர்நிலைகள் கட்டப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். தொழில்நுட்பம், தொழில்துறை மற்றும் ஸ்டார்ட்அப்களை இணைக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார், மேலும் சிக்கல்களைக் கண்டறிந்து தீர்வுகளைக் கண்டறிவதோடு, புவி உணர்வு மற்றும் புவி- வரைபடம் போன்ற தொழில்நுட்பங்களைக் குறிப்பிட்டார். கொள்கை அளவில் நீர் தொடர்பான சிக்கல்களை எதிர்கொள்ள அரசின் கொள்கைகள் மற்றும் அதிகாரத்துவ நடைமுறைகளை கொண்டு வர வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீரை வழங்குவதற்கான ஒரு மாநிலத்தின் முக்கிய வளர்ச்சி அளவுகோலாக நீர் வள இயக்கம் இருப்பதன்   வெற்றியை எடுத்துரைத்த பிரதமர், பல மாநிலங்கள் இந்த திசையில் முன்னேறி வரும் நிலையில் பல மாநிலங்கள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார். இந்த அமைப்பு நடைமுறைக்கு வந்தவுடன், எதிர்காலத்திலும் அதன் பராமரிப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார். கிராமப் பஞ்சாயத்துகள் நீர்வள இயக்கத்தை வழிநடத்த வேண்டும் என்றும், பணிகள் முடிந்த பிறகு, போதுமான மற்றும் சுத்தமான தண்ணீர் கிடைக்கப்பெற்றுள்ளதாக சான்றளிக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார். "ஒவ்வொரு கிராம பஞ்சாயத்தும் கிராமத்தில் குழாய் மூலம் தண்ணீர் பெறும் வீடுகளின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டு மாதாந்திர அல்லது காலாண்டு அறிக்கையை இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம்." மேலும், தண்ணீரின் தரத்தை உறுதி செய்வதற்காக அவ்வப்போது தண்ணீர் பரிசோதனை செய்யும் முறையும் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தொழில்துறை மற்றும் வேளாண் துறை ஆகிய இரு துறைகளிலும் உள்ள நீர் தேவைகளை குறிப்பிட்ட பிரதமர், நீர் பாதுகாப்பு குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சிறப்பு பிரச்சாரங்களை நடத்த பரிந்துரைத்தார். பயிர் பன்முகப்படுத்தல் மற்றும் இயற்கை வேளாண்மை போன்ற தொழில் நுட்பங்களின் உதாரணங்களை அவர் எடுத்துக்கூறினார்.

ஒரு துளி அதிகப் பயிர்என்ற இயக்கத்தின் கீழ் நாட்டில் 70 லட்சம் ஹெக்டேருக்கும் மேலான நிலப்பரப்பு நுண்ணீர் பாசனத்தின் கீழ் இதுவரை கொண்டுவரப்பட்டுள்ளது” என்று சுட்டிக்காட்டினார். நுண்ணீர் பாசனம் அனைத்து மாநிலங்களிலும்  மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மேலும் அவர் கூறினார்.   அடல் நிலத்தடி நீர் பாதுகாப்புத்  திட்டத்தின் மூலம், அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீரை பெருக்குவதற்கு பெரிய அளவில் பணிகளை மேற்கொள்வது அவசியமாகிறது, மேலும் மலைப்பாங்கான பகுதிகளில் நீரூற்றுகளை புதுப்பிக்க, வளர்ச்சிப் பணிகளை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

 நீர் பாதுகாப்பிற்காக மாநிலத்தில் வனப்பரப்பை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர்,  இதற்காக சுற்றுச்சூழல் மற்றும் நீர்வள அமைச்சகம் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்றும் கூறினார். உள்ளூர் அளவில் நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் தண்ணீர் விநியோகம் முதல் தூய்மைப் பணி மற்றும் கழிவு மேலாண்மையைக் கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்துவதற்கான வழிவகைகளைக் காணும் செயல்திட்டத்தை கிராமப் பஞ்சாயத்துகள் தயாரிக்க வேண்டும். கிராமங்களில் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு அதற்கான நிதியை பஞ்சாயத்து அளவில் ஏற்படுத்த வேண்டும் என்றும் அதற்கான பணிகள் நடைபெறுவது குறித்த வழிவகைகளை  காண வேண்டும் என்றும் மாநில அரசுகளை அவர் கேட்டுக்கொண்டார். மழைநீர் சேகரிப்பு இயக்கத்தின் வெற்றி குறித்து குறிப்பிட்ட பிரதமர், அது போன்ற இயக்கங்கள் மாநில அரசுகளுக்கு அவசியம்  என்றும் அவை ஆண்டு தோறும் மதிப்பிடப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.  மழைக்காக காத்திருக்காமல், மழைக்கு முன்பாக திட்டப்பணிகளும் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.

நீர் பாதுகாப்புத் துறையில் சுற்றுப்பொருளாதாரத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார் பிரதமர். இந்த நிதிநிலை அறிக்கையில்  சுற்றுப்பொருளாதாரம் குறித்து அரசுக்குப்  பொறுப்பு உள்ளதாகத் தெரிவித்தார். சுத்திகரிக்கப்பட்ட நீர் மீண்டும் பயன்படுத்தும் போதும்,  புதிய நீரை பாதுகாக்கும் போதும் ஒட்டுமொத்த  சுற்றுச்சூழல் முறையும் பயனடைவதாகக் கூறினார். ஆதலால் நீர் சுத்திகரிப்பு, நீர் மறுசுழற்சி ஆகியவை அவசியம் என்றும் குறிப்பிட்டார். பல்வேறு நோக்கங்களுக்காக சுத்திகரிக்கப்பட்ட நீரை  பயன்படுத்துவதை அதிகரிப்பதற்கான வழிவகைகளை அரசு கண்டறிய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நமது ஆறுகள், நமது நீர்நிலைகள் ஆகியவை ஒட்டுமொத்த தண்ணீர் சுற்றுச்சூழல் முறையின் மிகவும் முக்கியமானப் பகுதியாகும்” என்று தெரிவித்த பிரதமர் அனைத்து மாநிலத்திலும் கழிவு மேலாண்மை மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

தூய்மை கங்கை இயக்கத்தை எடுத்துக்காட்டாகக் கொண்டு மற்ற மாநிலங்களும் ஆறுகளின் பாதுகாப்புக்காக அதே போன்ற இயக்கங்களை  தொடங்க முடியும்” என்றும் அவர் கூறினார்.  தண்ணீர் துறையில் ஒத்துழைத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அனைத்து மாநில அரசுகளின் பொறுப்பு என்று  பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

தண்ணீர் குறித்து முதலாவது அகில இந்திய மாநில அமைச்சர்கள் ஆண்டு மாநாட்டில் அனைத்து மாநிலங்களின் நீர்வள அமைச்சர்களும் பங்கேற்றனர்.

***

(Release ID: 1888763)

AP/IR/AG/RR

 (Release ID: 1888853) Visitor Counter : 259