பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
பொது சேவை ஒலிபரப்புக்கு பெரும் ஊக்கம்: பிரசார் பாரதி உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.2539.61 கோடி ஒதுக்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
04 JAN 2023 4:07PM by PIB Chennai
அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரசார் பாரதியின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு 2025-26 ஆம் ஆண்டு வரை, ரூ.2539.61 கோடி ஒதுக்கீடு செய்ய பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரசார் பாரதியின் உள்ளீட்டு மேம்பாடு மற்றும் விரிவாக்கத்திற்கு இது உதவுவதுடன், சிவில் கட்டுமானப் பணிகளுக்கும் ஆதரவு வழங்கும். ஒலிபரப்பு உள்கட்டமைப்பு மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்படும்.
நாட்டில் பொது ஒலிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தகவல், கல்வி, பொழுதுபோக்கு, மக்களுக்கான நிகழ்ச்சிகளை, தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி மூலம் நாட்டின் தொலை தூர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பரப்பும் முக்கியப் பணியை மேற்கொண்டு வருகிறது. பொது சுகாதார செய்திகளையும், கொவிட் பெருந்தொற்று காலத்தில் மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதிலும் பிரசார் பாரதி மிக முக்கியப் பங்காற்றியுள்ளது.
இந்தத் திட்டம் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் பிரசார் பாரதியின் ஒலிபரப்பை விரிவுபடுத்த வழிவகுக்கும். உள்நாட்டு மற்றும் சர்வதேச பார்வையாளர்களுக்கு உயர்தரமான உள்ளீடு கொண்ட செய்திகளை வழங்கி வருவதுடன் பல்வேறு தொலைக்காட்சி அலைவரிசைகளை உள்ளடக்கிய டிடிஎச் தளத்தையும் பிரசார் பாரதி கொண்டுள்ளது.
தூர்தர்ஷன் தற்போது 36 டிவி சேனல்களை இயக்கி வருகிறது. இவற்றில் 28 பிராந்திய சேனல்களாகும். அகில இந்திய வானொலி 500-க்கும் மேற்பட்ட மையங்களில் இயங்கி வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1888540
****
AP/PKV/RR/KPG
(Release ID: 1888590)
Visitor Counter : 251
Read this release in:
Bengali
,
Kannada
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam