மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா திருவனந்தபுரத்தில் 29 நடமாடும் கால்நடை மருத்துவமனையை திறந்து வைக்கிறார்

Posted On: 04 JAN 2023 2:26PM by PIB Chennai

மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா திருவனந்தபுரத்தில் 29 நடமாடும் கால்நடை மருத்துவமனைகளையும், மையப்படுத்தப்பட்ட கால் சென்டரையும் நாளை திறந்து வைக்கிறார். நடமாடும் கால்நடை மருத்துவமனைக் கிளைகள் மையப்படுத்தப்பட்ட கால் சென்டர் மூலம் ஒருங்கிணைத்து இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.  இதன் விளைவாக கேரள மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் கால்நடைகளுக்கு நன்மை விளைவிக்கும்.

கால் சென்டர் ஹெல்ப் லைன் எண்:1962-ஐ கால்நடை உரிமையாளர்கள், தொலைபேசி மூலம் அழைக்கலாம்.  அவசர மருத்துவ சேவைத் தேவைப்படும் கால்நடைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு நடமாடும் கால்நடை மருத்துவமனைக் கிளை சம்பந்தப்பட்ட கால்நடை உரிமையாளரின் இல்லத்திற்கு செல்லும்.

கால்நடை சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு மற்றும் நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கு தேவைப்படும் மருத்துவ தகவல்களை வழங்குவதற்கு இந்த நடமாடும் கால்நடை மருத்துவமனைக் கிளைகள் பெரும் பங்காற்றும்.

 **********

AP/GS/RJ/KPG


(Release ID: 1888537)