குடியரசுத் தலைவர் செயலகம்
புத்தாண்டை முன்னிட்டு குடியரசுத் தலைவர் வாழ்த்துச் செய்தி
இடுகை இடப்பட்ட நாள்:
31 DEC 2022 6:27PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, 2023 புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
“புத்தாண்டு தினத்தில், நாட்டு மக்கள் அனைவருக்கும் மற்றும் வெளிநாடுகளில் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் எனது மனமார்ந்த மற்றும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புத்தாண்டு விடியல், புதிய ஆற்றலுடன், புதிய மகிழ்ச்சியையும், இலக்குகளையும், உத்வேகங்களையும், நமது வாழ்வில் பெரிய சாதனைகளையும் கொண்டுவரட்டும். இந்தத் தருணத்தில், தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு நம்மை அர்ப்பணித்துக் கொள்ள உறுதி ஏற்போம்.
2023-ம் ஆண்டில் நமது புகழ்பெற்ற தேசம் மற்றும் மக்களின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
இவ்வாறு குடியரசுத் தலைவர் தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
******
MS/PLM/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1887789)
வருகையாளர் எண்ணிக்கை : 201