மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

மத்திய கல்வி அமைச்சகத்தின் 2022-ம் ஆண்டு செயல்பாடுகள் குறித்த கண்ணோட்டம்

Posted On: 30 DEC 2022 8:39PM by PIB Chennai

*சமக்ர சிக்ஷா – ஒருங்கிணந்த கல்வித்திட்டம்

மத்திய அரசு பள்ளிக் கல்வியில் சமக்ர சிக்ஷா என்ற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தைத் தொடங்கியது.  இத்திட்டம் மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப் படிப்பு வரையில் செயல்படுத்தப்படும். அனைத்து நிலைகளிலும் சமமான தரமான கல்வி கிடைக்க இத்திட்டம் மூலம் உறுதி செய்யப்படும். சமக்ர சிக்ஷா திட்டம் தேசிய கல்விக் கொள்கை: 2020  பரிந்துரைகளுடன் சீரமைக்கப்பட்டு 2021-22 முதல் 2025-26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு சமக்ர சிக்ஷா திட்டத்தை ஐந்தாண்டுகளுக்குத் தொடர ஒப்புதல் அளித்துள்ளது, அதாவது 2021-22 முதல் 2025-26 வரை மொத்த நிதிச் செலவினமான ரூ.2,94,283.04 கோடியில் மத்திய அரசின் பங்கான ரூ.1,85,398.32 கோடியும் இதில் அடங்கும்.

 

*தகவல் & தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் ஸ்மார்ட் வகுப்பு ஒப்புதல்கள்

சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப கூறுகளின் கீழ், பாடத்திட்டத்தின்  அடிப்படையிலான கலந்துரையாடல் மல்டிமீடியா, டிஜிட்டல் புத்தகங்களை உருவாக்கி குழந்தைகளுக்கு கணினி கல்வியறிவு மற்றும் கணினி-மூலம் கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வகையான ஸ்மார்ட் வகுப்பறைகள், அனைத்து அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது. இது தொடங்கியதில் இருந்து நவம்பர் 2022 வரையில், நாடு முழுவதும் 1,20,614 பள்ளிகளில் தகவல் & தொடர்பு தொழில்நுட்ப ஆய்வகங்களும், 82,120 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளும் அனுமதிக்கப்பட்டுள்ளன.

 

* பிரஷாஸ்ட் மொபைல் செயலி

பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, பள்ளிகளுக்கான குறைபாடுகள் சரிபார்ப்புப் பட்டியலையும், 2022-ஆம் ஆண்டு பள்ளிகளுக்கான பிரஷாஸ்ட் மொபைல் செயலி - “முன் மதிப்பீடு முழுமையான ஸ்கிரீனிங் கருவி” என்ற தலைப்பில் ஆண்ட்ராய்டு மொபைல் செயலி  அறிமுகப்படுத்தப்பட்டது. 21 இயலாமை நிலைகளை அடையாளம் காண இந்த செயலி உதவும்.

இந்த  மொபைல் செயலியை சிஐஇடி, என்சிஇஆர்டி  உருவாக்கியுள்ளது.

 

*கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா (கேஜிபிவி) தரம் உயர்த்துதல்:

 

கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா, மூலம் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மையினர் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பிரிவுகளைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு முதல் 12-ம் வரையிலான சிறுமிகளுக்கான  குடியிருப்புப் பள்ளிகளாகும். சமக்ர சிக்ஷாவின் கீழ், தற்போதுள்ள கேஜிபிவிகளை உயர் தொடக்க நிலையிலும், சிறுமிகள் விடுதிகள் இரண்டாம் நிலை/முதுநிலை இரண்டாம் நிலையிலும், மூத்த இடைநிலை நிலை வரை மேம்படுத்த/ஒருங்கிணைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேஜிபிவிகளை தரம் உயர்த்தும் பணி 2018-19 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 2022-23 ஆம் ஆண்டு வரை மொத்தம் 357 கேஜிபிவிகள் வகை-II (வகுப்பு 6-10) மற்றும் 2010 கேஜிபிவிகளாக தரம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வகை-III (வகுப்பு 6-12) க்கு மேம்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

******

MS/GS/DL



(Release ID: 1887737) Visitor Counter : 228