பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

1.5 லட்சம் ஆரோக்கிய மையங்களின் உருவாக்கம் என்ற இலக்கை அடைந்ததற்கு பிரதமர் பாராட்டு

இடுகை இடப்பட்ட நாள்: 29 DEC 2022 8:54PM by PIB Chennai

1.5 லட்சம் ஆயுஷ்மான் பாரத்- சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் உருவாக்கப்பட்டு, இலக்கு எட்டப்பட்டிருப்பது, புதிய இந்தியாவில், புதிய ஆற்றலை புகுத்தும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் வளம் என்பது ஆரோக்கியமான குடிமக்களை சார்ந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவின் ட்விட்டர் பதிவிற்கு பதில் அளித்துள்ள பிரதமர், “ஆரோக்கியமான குடிமக்களை சார்ந்துதான் இந்தியாவின் வளம் உள்ளது. மிக அதிக எண்ணிக்கையில் இது போன்ற சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் நிறுவப்பட்டிருப்பது, இந்தப் பாதையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும். இந்த சாதனை, புதிய இந்தியாவில், புதிய ஆற்றலை புகுத்தவிருக்கிறது”, என்று கூறினார்.

************

(Release ID: 1887406)

RB/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 1887452) வருகையாளர் எண்ணிக்கை : 203
இந்த வெளியீட்டை படிக்க: Kannada , Marathi , Malayalam , Assamese , Odia , English , Urdu , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Telugu