சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
ஆண்டுக் கண்ணோட்டம் 2022: சட்டமியற்றும் விவகாரங்கள் துறை
Posted On:
29 DEC 2022 2:06PM by PIB Chennai
2022 ஜனவரி 1 முதல் டிசம்பர் 5 வரையிலான காலத்தில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் அறிமுகம் செய்வதற்காக / பிரகடனப் பிரிவுக்காக மசோதாக்கள்/அவசர சட்டங்கள் வரைவுக்குப் பல்வேறு அமைச்சகங்கள்/துறைகளுடன் கலந்தாலோசித்து அமைச்சரவைக்கான 78 குறிப்புகளை இந்தத் துறை ஆய்வு செய்துள்ளது. இந்தக் காலத்தில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்வதற்காக 19 சட்ட மசோதாக்கள் அனுப்பப்பட்டன. நிதி மசோதா 2022, அரசியல் அமைப்புச்சட்ட (பழங்குடியினர்) உத்தரவு (திருத்த) மசோதா 2022, அரசியல் அமைப்புச்சட்ட (ஷெட்யூல்ட் வகுப்பு மற்றும் பழங்குடியினர்) உத்தரவுகள் (திருத்த) மசோதா 2022, அரசியல் அமைப்புச்சட்ட (ஷெட்யூல்ட் வகுப்பு மற்றும் பழங்குடியினர்) உத்தரவுகள் (இரண்டாம் திருத்த) மசோதா 2022, குற்ற நடைமுறை (அடையாளம்காணுதல்) மசோதா2022, குடும்ப நீதிமன்றங்கள் (திருத்த) மசோதா 2022, மத்தியப் பல்கலைக்கழகங்கள் (திருத்த) மசோதா 2022, மின்சார (திருத்த) மசோதா 2022 போன்றவை 01.01.2022 முதல் 28.11.2022 வரை முன்வைக்கப்பட்ட மசோதாக்களில் அடங்கும். இந்தக் காலகட்டத்தில் 17 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளன.
இதே காலகட்டத்தில் லட்சத்த்தீவு யூனியன் பிரதேசத்தில் முறைப்படுத்துதல் நடவடிக்கைகளுக்காக 5 அவசர சட்டங்களைக் குடியரசுத்தலைவர் பிறப்பித்துள்ளார்.
2022, ஜனவரி முதல் நவம்பர் 28 வரையிலான காலகட்டத்தில், இந்தத் துறையால் ஆய்வு செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்ட சட்ட விதிகள், ஒழுங்குமுறைகள், உத்தரவுகள் மற்றும் அறிவிப்புகளின் எண்ணிக்கை 2098 ஆகும். தேர்தல் செலவின் உச்சவரம்பு திருத்தமும் இதில் அடங்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1887264
****
AP/SMB/KRS
(Release ID: 1887327)
Visitor Counter : 326