தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav g20-india-2023

உள்நாட்டு புலம்பெயர்ந்தோர் இருந்த இடத்தில் இருந்தே வாக்களிக்க வகைசெய்யும் முன்னோடி திட்டத்தை செயல்படுத்த தயார் நிலையில் தேர்தல் ஆணையம்: புலம் பெயர்ந்த வாக்காளர் வாக்களிக்க சொந்த மாநிலத்துக்கு பயணம் செய்ய வேண்டியதில்லை

Posted On: 29 DEC 2022 1:32PM by PIB Chennai

நவீன தொழில்நுட்ப யுகத்தில் புலம்பெயர்ந்தோர் இருந்த இடத்தில் இருந்தவாறு வாக்களிக்கும் நடைமுறையை செயல்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் 67.4 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன.  30 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்யாதது கவலை அளிக்கும் விஷயம் என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது. வாக்களிக்கும் உரிமையை சரிவர பயன்படுத்துவதற்கு ஏதுவாக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளது. நாட்டுக்குள் புலம் பெயர்ந்தவர்கள் குறித்த தரவுகள் இல்லாத நிலையில், இருக்கின்ற தரவுகளை வைத்து ஆய்வு செய்ததில், 85 சதவீத புலம் பெயர்ந்தோர் உள்நாட்டில் பல்வேறு மாநிலங்களுக்கு பணி மற்றும் இதர காரணங்களுக்காக சென்றிருப்பது தெரியவந்துள்ளது.  

உள்நாட்டில் பல்வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து வசித்து வருவோர் தங்களது சொந்த மாநில தேர்தல்களில் வாக்களிக்க வகை செய்யும் எம்-3 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.  வாக்குப்பதிவுக்காக சொந்த மாநிலங்களுக்கு செல்லாமல் தற்போது இருக்கும் இடங்களில் வாக்களிக்க இந்த நடைமுறை வழிவகுக்கும் என கூறப்படுகிறது.

தொலைதூரத்தில் இருக்கும் வாக்குச்சாவடியில் இருந்து இந்த எந்திரம் மூலம் வாக்களிக்க முடியும். இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மாதிரியுடன் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கருத்து கேட்டு ஆலோசனை நடத்த ஜனவரி 16-ந் தேதி  கூட்டம் ஒன்றை தேர்தல் ஆணையம் அழைத்துள்ளது.  அங்கீகரிக்கப்பட்ட 8 தேசிய கட்சிகள், 57 மாநில கட்சிகளுக்கு ஜனவரி 16-ந் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்குமாறு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு செயல்முறை விளக்கம் செய்து காட்டுவார்கள். அரசியல் கட்சிகளிடமிருந்து எழுத்து மூலமான கருத்துக்களை 31.01.2023-க்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1887248

*********

AP/PKV/AG/KRS



(Release ID: 1887279) Visitor Counter : 398