பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

2022-ஆம் ஆண்டில் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறையின் குறிப்பிடத்தக்க சாதனைகளின் கண்ணோட்டம்

Posted On: 29 DEC 2022 9:35AM by PIB Chennai

பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை, 2022-ஆம் ஆண்டில் மேற்கொண்ட முக்கிய சாதனைகளும், முன்முயற்சிகளும் பின்வருமாறு:

•     தேசிய அளவிலான டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் முகாமினால் 30 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைந்தனர்: ஓய்வூதியதாரர்கள்/ குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு எளிதான வாழ்வை ஏற்படுத்தி தருவதற்காக நவம்பர் 1 முதல் 30-ஆம் தேதி வரை டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நாடு முழுவதும் 37 நகரங்களில் நடைபெற்றது. நவம்பர் 30, 2022 வரை மொத்தம் 30.85 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் இந்த சேவையை வெற்றிகரமாகப் பயன்படுத்தியுள்ளனர். இவர்களுள் 2.88 லட்சம் பேர் முக அடையாளத் தொழில்நுட்பம் வாயிலாக ஆயுள் சான்றிதழை சமர்ப்பித்துள்ளனர்.

•     2020, 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளுக்கான அனுபவ் விருதுகள்:

ஓய்வு பெற்ற அதிகாரியின் அனுபவங்களை டிஜிட்டல் வழியில் பாதுகாக்கும் முயற்சியாக பிரதமரின் கோரிக்கையை ஏற்று அனுபவ் தளம் 2015-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அக்டோபர் 18-ஆம் தேதி புதுதில்லியின் விஞ்ஞான் பவனில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இந்த விருதுகளை வழங்கினார்.

•     அனுபவ் விருது வென்றவர்கள், இணைய வழி கருத்தரங்குகள் வாயிலாக சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்தனர். நவம்பர் 22-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் நடைபெற்ற இந்தத் தொடர் கருத்தரங்கில், சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள் மற்றும் அமைச்சகங்கள்/ துறைகள்/ நிறுவனங்களுடன் விருது பெற்றவர்கள் கலந்துரையாடினார்கள்.

•     ஓய்வூதியதாரர்களுக்கான ஒற்றைச் சாளர தளமான பவிஷ்யா வாயிலாக ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வு பெற்ற பிறகு வழங்கப்படும் சேவைகளை அளிப்பதற்காக பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து ஒருங்கிணைந்த ஓய்வூதியதாரர்கள் தளம் அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஓய்வூதியங்களை வழங்கும் அனைத்து 17 வங்கிகளும் இந்தத் தளத்தில் ஒருங்கிணைக்கப்படும். இந்தத் தளத்தினால் 11 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.

•     இணையதளம் வாயிலாக ஓய்வூதிய ஒப்புதல் மற்றும் கட்டண அமைப்பு முறையை கண்காணிப்பதற்காக பவிஷ்யா என்ற தளத்தை துறை தொடங்கியது. ஓய்வூதியம் வழங்கப்படுவதில் ஏற்படும் தாமதத்தை ஓய்வு பெற்ற ஊழியர்களும், நிர்வாக அதிகாரிகளும் கண்காணிப்பதற்கு இந்த அமைப்பு முறை உதவிகரமாக உள்ளது. மத்திய அரசு சேவை தளங்களிடையே மூன்றாவது சிறந்த தளமாக இது தேர்வு செய்யப்பட்டுள்ளது.

•     நாடு தழுவிய ஓய்வூதிய டிஜிட்டல் அதாலத், மே 5-ஆம் தேதி அனைத்து அமைச்சகங்கள்/ துறைகள் இடையே நடைபெற்றது. மத்திய ஆயுதப்படை, பாதுகாப்பு, ரயில்வே, தொலைத் தொடர்பு மற்றும் அஞ்சல் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் இதில் அடங்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1887189

-------------

RB/PKV/RR(Release ID: 1887225) Visitor Counter : 210