தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
2023-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் அதிகாரபூர்வ நாள்காட்டியை மத்திய அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் வெளியிட்டார்
Posted On:
28 DEC 2022 5:59PM by PIB Chennai
2023-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் அதிகாரபூர்வ நாள்காட்டியை மத்திய அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், பிரதமர் திரு நரேந்தி மோடியின் அனைவருடன், அனைவரின் நலனுக்காக, அனைவரின் நம்பிக்கை மற்றும் முயற்சியுடன் என்ற நம்பிக்கையை இந்த நாள்காட்டி பிரிதிபலிப்பதாக கூறினார்.
புத்தாண்டு புதிய தீர்மானம் என்ற தலைப்பில் அரசின் சாதனைகள் எதிர்காலத் திட்டங்களை எடுத்துக்காட்டும் வகையில், இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
11 லட்சம் பிரதிகள் அச்சிடப்பட உள்ளதாகவும் இது, 2.5 லட்சம் பிரதிகள் பிராந்திய மொழிகளில் அச்சிடப்படும் என்றும் கூறினார். 13 மொழிகளில் அச்சிடப்படும் இந்த நாள்காட்டிகள் நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பஞ்சாயத்துக்களுக்கு விநியோகிக்கப்படும் என்று தெரிவித்தார். கடந்த 2 வருடங்களாக டிஜிட்டல் முறையில் வெளியிடப்பட்ட நாள்காட்டி, இந்த வருடம் நேரடியாக அச்சிடப்படுவதாக கூறினார்.
தூர்தர்ஷனின் இலவச டிஷ் 2022-ம் ஆண்டு 43 மில்லியனுக்கும் மேற்பட்ட வீடுகளை சென்றடைந்ததாக தெரிவித்தார். பிரசார் பாரதியின் பல்வேறு அலைவரிசைகளுக்கு 2 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களும், நேயர்களும் உள்ளதாக கூறினார். நடப்பாண்டு மேலும் 75 சமுதாய வானொலி நிலையங்கள் தொடங்கப்பட்டதன் மூலம் நாட்டில் அதன் எண்ணிக்கை 397ஆக அதிகரித்துள்ளது. கடந்த 5 வருடங்களில் பத்திரிகையாளர் நலத் திட்டத்தின் கீழ், 290 பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர் குடும்பத்தினருக்கு 13.12 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக திரு அனுராக் தாக்கூர் குறிப்பிட்டார்.
****
SM/IR/RS/KRS
(Release ID: 1887143)
Visitor Counter : 237