சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சி.டி.எஸ்.சி.ஓ) மற்றும் மாநில மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் மருந்து உற்பத்தி அலகுகளில் கூட்டு ஆய்வு

Posted On: 27 DEC 2022 2:06PM by PIB Chennai

நிலையான செயல்பாட்டு நடைமுறைகளின்படி நாடு முழுவதும் கூட்டு ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.

ஆய்வு, அறிக்கை மற்றும் நடவடிக்கைகளை கண்காணிக் சி.டி.எஸ்.சி.ஓ  தலைமைச் செயலகத்தில் இரண்டு கூட்டு மருந்துக் கட்டுப்பாட்டாளர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர், டாக்டர். மன்சுக் மாண்டவியாவின், உத்தரவின் போல நிலையான செயல்பாட்டு நடைமுறைகளின்படி மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சி.டி.எஸ்.சி.ஓ) மற்றும் மாநில மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்துடன் இணைந்து, பாதுகாப்பு அடிப்படையிலான அணுகுமுறையின்படி, மருந்து உற்பத்தி அலகுகளில், கூட்டு ஆய்வு நடத்தத் தொடங்கியுள்ளது.

மருந்து உற்பத்தி அலகுகள், மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940 இன் கீழ் உள்ள விதிகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காகவும், அதன் ஆய்வு, அறிக்கை மற்றும் நடவடிக்கைகளை கண்காணிக்க மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பில் இரண்டு கூட்டு மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் உயர் தரத்தில் இருப்பதை உறுதி செய்யும்

ஆய்வுகளை மேற்கொள்வதற்கு முன், தரமற்ற (NSQ)/கலப்பட/ போலியான மருந்துகளை உற்பத்தி செய்யும் உற்பத்தி அலகுகளை கண்டுபிடிக்க தேசிய அளவு ஆய்வுத்திட்டம் தயாரிக்கப்பட்டது.

நாட்டில் வழங்கப்படும் மருந்துகளின் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் தரம் ஆகியவற்றை உறுதி செய்வதே மருந்து ஒழுங்குமுறையின் நோக்கமாகும். உற்பத்தி அலகுகள், மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940 த்தின் கீழ் உள்ள விதிகளையும் குறிப்பாக சிறந்த உற்பத்தி நடைமுறைகளின் (GMP) தேவைகளுக்கு இணங்குவதை உறுதி செய்ய மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் தேவைப்படுகிறது.

**************

(Release ID:1886842)

SM/RK/RJ



(Release ID: 1886906) Visitor Counter : 196