ரெயில்வே அமைச்சகம்
9000 குதிரைத் திறன் கொண்ட மின்சார சரக்குவாகன என்ஜின்கள் உற்பத்தி மற்றும் பராமரிப்புக்கு சீமென் இந்தியா நிறுவனத்திற்கு இந்திய ரயில்வே ஒப்புதல் கடிதம் வழங்கியுள்ளது
Posted On:
24 DEC 2022 11:12AM by PIB Chennai
9000 குதிரைத் திறன் கொண்ட மின்சார சரக்குவாகன என்ஜின்கள் உற்பத்தி மற்றும் பராமரிப்புக்கு சீமென் இந்தியா நிறுவனத்திற்கு இந்திய ரயில்வே ஒப்புதல் கடிதம் வழங்கியுள்ளது . தஹோட்டாவில் உள்ள ரயில்வே தொழிற்சாலையில் அதிகப்பட்ச குதிரைத் திறன் கொண்ட (9000 குதிரை திறன்) 1200
மின்சார சரக்கு என்ஜின்கள் 11 ஆண்டுகளுக்கு உற்பத்தி செய்யப்படும். இந்த எஞ்சின்களை உற்பத்தி செய்வதோடு 35 ஆண்டுகளுக்கு இந்த நிறுவனம் பராமரிக்கவும் செய்யும். இதற்கான ஒப்பந்தத்தின் மதிப்பீடு (வரிகள் மற்றும் விலை மாறுபாடு நீங்கலாக) ரூ. 26,000 கோடி (சுமார் 3.2 பில்லியன் அமெரிக்க டாலர்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒப்புதல் கடிதம் அளிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் சீமென் இந்தியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும். இந்த என்ஜின்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் விநியோகிக்கப்படும். இவற்றைத் தயாரிப்பதற்காகவே தஹோட்டா பிரிவு கட்டப்பட்டுள்ளது. இந்த என்ஜின்களை பராமரிப்பதற்காக விசாகப்பட்டினம், ராய்ப்பூர், கரக்பூர், புனே ஆகிய இடங்களில் பணி மணிகள் இருக்கும் ரயில்வேயின் மனித சக்தியைப் பயன்படுத்தி 35 ஆண்டுகளுக்கு பராமரிப்பு பணியை சீமென் இந்தியா நிறுவனம் மேற்கொள்ளும். இது இந்தியாவில் உற்பத்தி என்ற முன் முயற்சி அடிப்படையிலான திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் தஹோட்டா பகுதி மேம்பாட்டுக்கு வழிவகுக்கப்படுவதுடன் வேலை வாய்ப்பையும் உருவாக்கும்.
நியாயமான, வெளிப்படையான, போட்டித் தன்மையுடனான ஒப்பந்த புள்ளிகள் பெறப்பட்டு சீமென் இந்தியாவை இந்திய ரயில்வே தெரிவுசெய்துள்ளது.
**************
SM/SMB/DL
(Release ID: 1886261)
Visitor Counter : 207