பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பீகார் மாநிலம் மோதிஹரியில் செங்கல் சூளையில் ஏற்பட்ட விபத்து காரணமாக உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்


பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகையை அறிவித்துள்ளார்

Posted On: 24 DEC 2022 9:47AM by PIB Chennai

பீகார் மாநிலம் மோதிஹரியில் செங்கல் சூளையில் ஏற்பட்ட விபத்து காரணமாக உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த  இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.  2 லட்சம் காயமடைந்தோருக்கு ரூ. 50,000 கருணைத் தொகையையும் பிரதமர் அறிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலக ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

" மோதிஹரியில் செங்கல் சூளை விபத்து காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டதற்காகக் கவலை அடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல்கள். காயமடைந்தோருக்காகப் பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.  2 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ. 50,000 கருணைத் தொகை வழங்கப்படும்: PM @narendramodi"

**************

SM/SMB/DL


(Release ID: 1886255) Visitor Counter : 180