மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

அனைத்துப் பள்ளிகளிலும் கைகழுவும் வசதிகளை ஏற்படுத்தவும் மாணவர்களுக்குத் தூய்மைக் குறித்த கல்வியைக் கற்பிக்க ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது

Posted On: 22 DEC 2022 9:27AM by PIB Chennai

நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிகளிலும் சோப்புகளைப் பயன்படுத்தி கைகளைக் கழுவும் வசதிகளை ஏற்படுத்தவும் மாணவர்களுக்குத் தூய்மைக் குறித்த கல்வியைக் கற்பிக்க ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்குமாறு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை, கல்வி அமைச்சகம், நீர்வள அமைச்சகம், நிதி ஆயோக், கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆகியவை கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், அனைத்து பள்ளிகளிலும், கழிப்பறைகள், முறையாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

அரசு பள்ளிகளில் தூய்மை வசதிகளை மேம்படுத்துதல், பாதுகாப்பான குடிநீரை வழங்குதல் மற்றும் ஒட்டுமொத்த தூய்மைப் பணிகளைப் பராமரித்தல், உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்புகளை மறுசீரமைத்தல், ஆகியவற்றுக்கு அரசு நீண்டகாலமாக முக்கியத்துவம் அளித்து வருகிறது.

ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ், நமது குழந்தைகளின் நல்ல ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வை உறுதி செய்ய பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பான குழாய் மூலம் குடிநீர், வழங்கப்படுவதை உறுதி  செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் உள்ள 10.22 லட்சம் அரசு பள்ளிகளில் 9.83 லட்சம் அரசு பள்ளிகளில் (சுமார் 96%) குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. 

**************

AP/IR/KPG/RR



(Release ID: 1885636) Visitor Counter : 131