குடியரசுத் தலைவர் செயலகம்
இந்திய வனத்துறை பயிற்சி அதிகாரிகள் குடியரசுத் தலைவரைச் சந்தித்தனர்
Posted On:
21 DEC 2022 1:59PM by PIB Chennai
இந்திய வனத்துறைப் பயிற்சி அதிகாரிகள் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தனர்.
தம்மைச் சந்தித்த அதிகாரிகளிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர், பூமியில் அனைத்து உயிரினங்களின் வாழ்க்கைக்கு காடுகள் நங்கூரம் போல உள்ளதாகத் தெரிவித்தார். வனவிலங்குகளுக்கும் பறவைகளுக்கும் புகலிடம் அளிப்பதுடன் வாழ்வாதார வளமாகவும் காடுகள் உள்ளன என்றும் அவர் கூறினார். கரியமிலவாயு உமிழ்வை பெருமளவிற்கு குறைப்பதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகளுக்கு அவை உதவுகின்றன. உலகில் மிக அறியவகை உயிரினங்களுக்கு காடுகள் இல்லமாகத் திகழ்கின்றன. சிறு காடுகளின் உற்பத்திப் பொருட்களை வைத்து நாட்டில் 27 கோடி பேர் வாழ்ந்து வருவதாகக் கூறிய அவர் காடுகள் மருத்துவப் மதிப்பும் கொண்டவை என்று தெரிவித்தார்.
காடுகளில் வசிக்கும் சமுதாயத்தினரின் உரிமைகள் மீது இந்தியா சிறப்புக் கவனம் செலுத்தி வருவதாக குடியரசுத் தலைவர் கூறினார். பழங்குடியினர் சமுதாயத்தினர் உட்பட காடுகளில் வசிப்பவர்கள் ஒத்திசைவான உறவுகளைக் கொண்டுள்ளனர் என்று கூறிய அவர் தற்போது காடுகள் பரவலாக அங்கிகரிக்கப்பட்டு தமது வளர்ச்சியின் அம்சங்களாகத் திகழ்கின்றன என்று அவர் குறிப்பிட்டார், இந்த சமுதாயத்தினரின் உரிமைகள், கடமைகள், உயிரி பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாத்தல் ஆகியவைக் குறித்து அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது இந்திய வனத்துறை அதிகாரிகளின் பொறுப்பு என அவர் தெரிவித்தார்.
நாட்டின் சமூக, கலாச்சாரப் பொருளாதார மேம்பாட்டுக்கு காடுகள் அத்தியாவசியமானவை என்று குறிப்பிட்ட குடியரசுத் தலைவர் காடுகளை உயிர்ப்புடன் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று கூறினார். வளர்ச்சியை போலவே நிலைத் தன்மையும் முக்கியமாகும். இயற்கை நமக்கு ஏராளமானக் கொடைகளை வழங்கி உள்ளது. அவற்றை காப்பாற்றி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். இயற்கை வளங்களை மறு உற்பத்தி செய்து அவற்றை நமது வருங்காலச் சந்ததியினருக்கு பரிசாக அளிப்பதுடன் நாட்டை அழகியச் சுற்றுச்சூழல் வளம்மிக்க நாடாக நாம் மாற்ற வேண்டும் என குடியரசுத் தலைவர் கேட்டுக் கொண்டார்.
**************
(Release ID: 1885401)
Visitor Counter : 173