பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு
azadi ka amrit mahotsav

போட்டித்திறனுக்கான நிறுவனம் மற்றும் சமூக முன்னேற்ற ஆய்வு அமைப்பால் உருவாக்கப்பட்டு பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கான சமூக முன்னேற்றக் குறியீடு (எஸ்பிஐ) இன்று வெளியிடப்பட்டது

புதுச்சேரி, லட்சத்தீவு, கோவா ஆகியவை சிறப்பாக செயல்படும் மாநிலங்களாக உருவெடுத்துள்ளன. ஐசால் (மிசோரம்), சோலன் (இமாச்சலப் பிரதேசம்), சிம்லா (இமாச்சலப் பிரதேசம்) ஆகியவை சிறந்த செயல்பாட்டுக்கான 3 முதன்மை மாவட்டங்கள் ஆகும்

Posted On: 20 DEC 2022 2:01PM by PIB Chennai

போட்டித்திறனுக்கான நிறுவனம் மற்றும் சமூக முன்னேற்ற ஆய்வு அமைப்பால்  உருவாக்கப்பட்டு பிரதமருக்கான  பொருளாதார ஆலோசனைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட  மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கான சமூக முன்னேற்றக் குறியீடு (எஸ்பிஐ) இன்று வெளியிடப்பட்டது.

அடிப்படை மனிதத்  தேவைகள், நல்வாழ்வுக்கான அடித்தளங்கள் மற்றும் வாய்ப்புகள் - சமூக முன்னேற்றத்தின் மூன்று முக்கியமான இந்தப் பரிமாணங்களில் 12 கூறுகளின் அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களை இந்தக் குறியீடு மதிப்பிடுகிறது.

மாநில அளவில் 89 அம்சங்கள்  மற்றும் மாவட்ட அளவில் 49 அம்சங்களை உள்ளடக்கிய விரிவான கட்டமைப்பை இந்தக்  குறியீடு பயன்படுத்தியுள்ளது.

• அடிப்படை மனித தேவைகள் என்பவை ஊட்டச்சத்து மற்றும் அடிப்படை மருத்துவ பராமரிப்பு, நீர் மற்றும் சுகாதாரம், தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் தங்குமிடம் ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களின் செயல்திறனை மதிப்பிடுகின்றன.

• நல்வாழ்வின் அடித்தளங்கள் என்பவை அடிப்படை அறிவுக்கான அணுகுதல், தகவல் மற்றும் தொடர்புக்கான அணுகுதல், உடல்நலம் மற்றும் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் தரம் ஆகிய கூறுகளில் நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தைக் கொண்டு மதிப்பிடுகின்றன.

• வாய்ப்பு என்பது தனிப்பட்ட உரிமைகள், தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் தெரிவு, உள்ளடக்கம் மற்றும் மேம்பட்ட கல்விக்கான அணுகுமுறை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

சமூக முன்னேற்றக் குறியீடுகள் எண்ணிக்கை அடிப்படையில், மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் சமூக முன்னேற்றத்தின் ஆறு அடுக்குகளின் கீழ் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அடுக்கு 1: மிக உயர்ந்த சமூக முன்னேற்றம்; அடுக்கு 2: உயர் சமூக முன்னேற்றம்; அடுக்கு 3: மேல் நடுத்தர சமூக முன்னேற்றம்; அடுக்கு 4: கீழ் மத்திய சமூக முன்னேற்றம்; அடுக்கு 5: குறைந்த சமூக முன்னேற்றம்;  அடுக்கு 6: மிகக் குறைந்த சமூக முன்னேற்றம்.

தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் தெரிவு, தங்குமிடம்,  நீர் மற்றும் சுகாதாரம் போன்ற கூறுகளில் அதன் குறிப்பிடத்தக்க செயல்திறனுக்காக புதுச்சேரி நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் 65.99 என்ற சமூக முன்னேற்றக் குறியீட்டைப் பெற்றுள்ளது.  இதைத் தொடர்ந்து லட்சத்தீவு,  கோவா ஆகியவை முறையே 65.89 மற்றும் 65.53 குறியீட்டு எண்களைப் பெற்றுள்ளன. தமிழ்நாடு 63.33 குறியீட்டு எண்களைப் பெற்று 6 வது இடத்தைப் பிடித்துள்ளது. ஜார்கண்ட், பீகார் ஆகியவை முறையே 43.95 மற்றும் 44.47 என்ற குறைந்த குறியீட்டு எண்களைப் பெற்றுள்ளன.

அடிப்படை மனிதத் தேவைகளின் பரிமாணத்தில், கோவா, புதுச்சேரி, லட்சத்தீவு, சண்டிகர் ஆகியவை மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் தண்ணீர் மற்றும் சுகாதாரம், தங்குமிடம் ஆகியவற்றில் சிறந்த செயல்திறன் கொண்ட முதல் நான்கு மாநிலங்களாக உள்ளன.

இந்தப் பரிமாணத்தில், தனிமனித சுதந்திரம், தெரிவு மற்றும் மேம்பட்ட கல்விக்கான அணுகுதல் ஆகிய இரண்டு கூறுகளிலும் புதுச்சேரி அதிக எண்ணிக்கையை  எட்டியிருப்பது பாராட்டுக்குரியது.

வாய்ப்புப்  பரிமாணத்திற்கான அதிகபட்ச குறியீட்டு எண்ணாக  72.00 ஐத்  தமிழ்நாடு பெற்றுள்ளது.

இந்த அறிக்கையைப்   பிரதமருக்கான  பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் டாக்டர் பிபேக் தேப்ராய்   இன்று (டிசம்பர் 20, 2022) புதுதில்லியில் வெளியிட்டார். போட்டித்திறனுக்கான நிறுவனத்தின் கெளரவத் தலைவர் டாக்டர் அமித் கபூர், சமூக முன்னேற்றத்திற்கான ஆய்வு அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் கிரீன் மற்றும் பிரமுகர்கள்  முன்னிலை வகித்தனர்.

 

**************

SM/SMB/KRS


(Release ID: 1885204) Visitor Counter : 369