இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

மத்திய விளையாட்டுத்துறையில் 2022-ம் ஆண்டின் செயல்பாடுகள் குறித்த முன்னோட்டம்

Posted On: 20 DEC 2022 3:52PM by PIB Chennai

விளையாட்டுத்துறையில் உலக அரங்கில் இந்தியர்களின் திறமையை நிலைநாட்டியதில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் பங்களிப்பு இன்றியமையாதது.  இந்திய விளையாட்டு வீரர்களின்  திறமைகளை வெளிக்கொணர்வது மட்டுமல்லாமல், அடிப்படை பயிற்சி முதல் அறிவுசார் யுக்திகள் வரை அனைத்தையும் பயிற்றுவித்து சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சாதனைப் படைத்து இந்தியாவின் பெருமையை பறைச்சாற்றச் செய்த பெருமை மத்திய விளையாட்டுத்துறையின்  இலக்கு நிர்ணயித்த செயல்பாட்டையே சாரும்.  

2022-ம் ஆண்டில் மத்திய விளையாட்டுத்துறையின் சாதனைகள்:

  • காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 22 தங்கப்பதக்கம் உள்ளிட்ட 61 பதக்கங்களுடன், பதக்கப்பட்டியலில் 4-ம் இடம் பிடித்து சாதனைப் படைத்தது.  குறிப்பாக பளுத்தூக்குதல், மல்யுத்தம் போன்ற போட்டிகளில் இந்தியர்களின் பங்களிப்பு சர்வதேச விளையாட்டு வீரர்களை பிரமிக்க வைத்தது.
  • தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில், 14 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தோனேஷியாவை வீழ்த்தி இந்தியா முதல் முறையாக வரலாற்றுச் சாதனைப் படைத்தது.
  • பிரேசிலில் நடைபெற்ற செவித்திறன் குறைபாடு ஒலிம்பிக்ஸ் போட்டியின் 8 தங்கப்பதக்கங்களுடன் 16 தங்கப்பதக்கங்களை வென்று இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்தது. உலக அரங்கில் முத்திரைப்பதித்த இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.
  • தேசிய விளையாட்டு மற்றும் சாகச விருதுகள் 2022-ஐ கடந்த 2022 நவம்பர் 30-ந் தேதி குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் மாளிகையில் வழங்கினார். டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமலுக்கு கேல் ரத்னா விருது உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு 44 விருதுகள் வழங்கப்பட்டன.

2022-ல் இந்தியா நடத்திய சர்வதேச விளையாட்டுப் போட்டிகள்

  • 17 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான உலகக்கோப்பை கால்பந்து இந்தியா 2022 கடந்த அக்டோபர் 11-ந் தேதி புவனேஸ்வரில் நடைபெற்றது. 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் நடத்தப்பட்ட 2-வது முக்கியமான கால்பந்துப் போட்டி இதுவாகும். மும்பையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கொலம்பியாவை வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றது.
  • 44-வது ஃபிடே செஸ் ஒலிம்பியாட் 2022 தமிழகத்தின் தலைநகர் சென்னையில் 2022 ஜூலை 28-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கிவைக்கப்பட்டது. 188 நாடுகளைச் சேர்ந்த இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட செஸ் மாஸ்டர்கள் பங்கேற்ற பிரம்மாண்டப் போட்டி இந்தியாவில் நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.

குஜராத்தில் தேசிய விளையாட்டு

  • 36-வது தேசிய விளையாட்டுப் போட்டி 2022 அக்டோபர் 12-ந் தேதி குஜராத்தின் சூரத் நகரில் நடைபெற்றது. இதில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 7 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய விளையாட்டுப் போட்டியை மீண்டும் நடத்தியிருப்பதில் மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் பங்களிப்பு போற்றத்தக்கது.

கேலோ இந்தியா திட்டம்

  • 4-வது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் ஹரியானாவில் 2022 ஜூன் 4-ந் தேதி தொடங்கியது. 13-ந் தேதி வரை நடைபெற்ற இந்தப் போட்டியில், 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 4700-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் உள்ளூர் விளையாட்டு உட்பட 25 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
  • 2-வது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் கர்நாடகாவில் நடைபெற்றது. 200-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 3894 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
  • கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் ஃபிட் இந்தியா பள்ளி வாரம் நவம்பர் 17-ந் தேதி துவங்கியது. இதில் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கேற்ற விளையாட்டுகள் குறித்து நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
  • மத்திய விளையாட்டு அமைச்சகம், இந்திய உணவுப்பாதுகாப்பு மற்றும் தர ஆணையம், தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து விளையாட்டு வீரர்கள் உட்கொள்ளும் உணவு மற்றும் ஊக்கமருந்து குறித்த பரிசோதனை மையத்தை அமைக்க வகை செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தம் 2022 அக்டோபர் 15-ந் தேதி மேற்கொள்ளப்பட்டது.

தேசிய ஊக்க மருந்து தடுப்பு மசோதா 2021

  • தேசிய ஊக்க மருந்துத் தடுப்பு முகமை (என்ஏடிஏ), தேசிய ஊக்க மருந்து பரிசோதனை ஆய்வகம் (என்டிடிஎல்) மற்றும் இதர ஊக்க மருந்து பரிசோதனை அமைப்புகளின் செயல்பாடுகளுக்கான வழிகாட்டு முறைகளை  நிர்ணயிக்கும் தேசிய ஊக்கமருந்துத் தடுப்பு மசோதா 2021 நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மக்களவையில் 2022, ஜூலை 7-ந் தேதியும், மாநிலங்களவையில் 2022, ஆகஸ்ட் 3-ந் தேதியும் நிறைவேற்றப்பட்டது.  இந்த புதியச் சட்டம் ஊக்கமருந்துத் தடுப்பு தேசிய வாரியத்தை அமைக்கவும், அதன் மூலம் நம்நாட்டு விளையாட்டு வீரர்களின்   ஊக்க மருந்துத் தடுப்புச்  செயல்களை ஒழுங்குப்படுத்தவும் வழிவகை செய்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1885086

**************

SM/ES/AG/KRS



(Release ID: 1885169) Visitor Counter : 213