பிரதமர் அலுவலகம்

திரிபுரா மாநிலம் அகர்தலாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 18 DEC 2022 7:36PM by PIB Chennai

பாரத் மாதாகி ஜே!

பாரத் மாதாகி ஜே!!

திரிபுரா மாநிலத்தின் ஆளுநர் திரு சத்தியதேவ் நாராயண் ஆர்யா, மாநில முதல்வர் திரு மாணிக் சாகா,  எனது அமைச்சரவை சகாக்களான பிரதிமா பௌமிக், திரிபுரா சட்டமன்றத்தின் சபாநாகர் திரு ரத்தன் சக்கரபோர்த்தி, துணை முதல்வர் திரு ஜிஷ்ணு தேவ் வர்மா, எனது நண்பரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு பிப்லப் தேவ், திரபுரா மாநில மதிப்புமிக்க அமைச்சர்கள் மற்றும் எனது அருமை திரிபுரா மக்கள்! ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.

நமஸ்காரம்!

வணக்கம்!!

மாதா திரிபுரசுந்தரியின் நிலப்பரப்பில் இருப்பதற்கு ஆசீர்வதிக்கப்பட்டு இருக்கிறேன். இந்த மாதா திரிபுரசுந்தரியின் புண்ணியப்பூமிக்கு வணக்கம் தெரிவித்துக்கொள்கிறேன்.

முதலில்  இந்த நிகழ்விற்கு சுமார் 2 மணி நேரம் காலதாமதமாக வந்தமைக்கு, மன்னிக்க வேண்டுகிறேன்.

நான் மேகாலயாவில் குறிப்பிட்ட கால அளவிற்கும் மேலாக நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட காரணத்தினால் காலதாமதம் ஏற்பட்டது. பலர்  11-12 மணியளவிலிருந்து காத்திருந்தனர் என்று கேள்விப்பட்டேன். இந்த காலதாமத பிரச்சனைகளுக்கு நடுவிலும் எனக்காக காத்திருந்து என்னை ஆசீர்வதித்தற்கு நன்றி கடன்பெற்றுள்ளேன். தூய்மைப் பணிக்காக மிகப்பெரிய இயக்கத்தை தொடங்கிய முயற்சிகளுக்காக திரிபுரா மக்களை நான் பாராட்டுகிறேன். கடந்த 5 ஆண்டுகளில் தூய்மை இயக்கத்தை மிகப்பெரிய அளவில் எடுத்துச் சென்றுள்ளீர்கள். இதன் விளைவாக, நாட்டில் உள்ள சிறிய மாநிலங்களில் தூய்மையான மாநிலமாக திரிபுரா தற்போது திகழ்கிறது.  

நண்பர்களே!

மாதா திரிபுரசுந்தரியின் ஆசீர்வதத்தால் திரிபுரா மாநிலத்தின் வளர்ச்சிப்பாதை உயர்ந்த நிலையில் உள்ளது. மற்ற பகுதிகளுடனான தொடர்பு, திறன்மேம்பாடு மற்றும் ஏழைகளுக்கு வீட்டு வசதி தொடர்புடைய திட்டங்களை செயல்படுத்தியதற்கு வாழ்த்து தெரிவிக்கின்றேன். இன்று திரிபுரா மாநிலத்திற்கு முதல் பல் மருத்துவக்கல்லூரி அமைந்திருக்கிறது. திரிபுரா மாநில இளைஞர்கள் மருத்துவர்களாக உருவாவதற்கு இந்த கல்லூரி பக்கப்பலமாக இருக்கும்,  2 லட்சத்திற்கு மேலான ஏழை குடும்பங்களுக்கு இன்று நல்ல வீடுகள் கிடைத்துள்ளன. பெரும்பாலான வீடுகளுக்கு நமது தாய் மற்றும் சகோதரிகள் உரிமையாளர்களாகவே இருக்கின்றனர். இதில் பல சகோதரிகளின் பெயர்களில் முதன் முறையாக சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. திரிபுரா மாநிலம் தற்போது, நாட்டிலேயே ஏழைகளுக்கு வீட்டு வசதி செய்து தரும் மாநிலங்களில் முதன்மையானதாக உள்ளது. மாணிக் அவர்களே! மற்றும் அவரது குழுவினரும் மிகச் சிறப்பாக தங்களது பணிகளை செய்து வருகின்றனர்.

தனி ஒருவருக்கு, ஓர் இரவிற்கு தங்குவதற்கு அனுமதி அளிப்பவர்களுக்கு, வாழ்நாள் முழுவதும் ஆசீர்வாதம் கிடைக்கும். தற்போது  இங்குள்ள அனைவருக்கும் வீடு கிடைத்துள்ளது. எனவே, திரிபுராவில் இருந்து அனைவருக்கும் ஆசீர்வாதங்கள் உண்டு. நான் விமான நிலையத்திலிருந்து வரும் வழியெங்கும் மக்கள் அதிகளவில் வரவேற்பு அளித்து என்னை ஆசீர்வதித்தனர். நானும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் விவரங்களுக்கு இந்தஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1884607

****************

 

AP/GS/RS/KRS



(Release ID: 1884798) Visitor Counter : 150