பிரதமர் அலுவலகம்

பிரமுக் சுவாமி மகாராஜ் சதாப்தி மஹோத்சவின் துவக்க விழாவில் பிரதமர் உரையாற்றினார்

Posted On: 14 DEC 2022 9:21PM by PIB Chennai

அகமதாபாத்தில் பிரமுக் சுவாமி மகாராஜ் சதாப்தி மஹோத்சவின் துவக்க விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

அப்போது பேசிய பிரதமர், இத்தகைய பிரம்மாண்டமான நிகழ்வுக்கான முயற்சிகளை மேற்கொண்ட துறவிகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, இந்த கோலாகலமான விழா உலக நாடுகளை ஈர்ப்பது மட்டுமல்லாமல் வரும் தலைமுறையினரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார். இந்தியாவின் வளமான துறவிகளின் கலாச்சாரத்தை இங்கு காண முடிவதாக பிரதமர் குறிப்பிட்டார். நமது கலாச்சாரம், இனம், பண்பாடு மற்றும் சிந்தனைகளை துறவிகளின் கலாச்சாரம் ஊக்கப்படுத்துவதோடு வசுதைவ குடும்பகம் என்ற உணர்விற்கு மதிப்பளிக்கும் வகையில் இந்திய துறவிகள் உலகை ஒன்றிணைத்து இருப்பதாக அவர் தெரிவித்தார்.

சுவாமி அவர்களுடனான தமது இளமை கால நினைவுகளை பிரதமர் பகிர்ந்து கொண்டார். அவர் ஒரு ஆன்மீகவாதி என்பதை அனைவரும் அறிவார்கள், இருந்த போதும், அவர் ஒரு உண்மையான சமூக சீர்திருத்தவாதியும் கூட என்று பிரதமர் தெரிவித்தார். சமூக நலனிற்கு அவர் அதிக முக்கியத்துவம் அளித்ததாக பிரதமர் கூறினார்.  “பிரமுக் சுவாமி மகாராஜ் ஒரு சீர்திருத்தவாதி. அனைவரிடத்திலும் நல்ல விஷயங்களை அவர் கண்டு அதில் கவனம் செலுத்த ஊக்கப்படுத்தியதால் அவர் மிகுந்த சிறப்புக்குரியவர் ஆவார். தம்மை நாடி வந்த ஒவ்வொரு நபருக்கும் அவர் உதவினார். மார்பியில் மச்சு அணை பேரிடரின் போது அவர் மேற்கொண்ட முயற்சிகளை என்னால் என்றும் மறக்க இயலாது” என்று பிரதமர் கூறினார்.

 

இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பட்டேல், ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்ரத், மதிப்பிற்குரிய மகாந்த் சுவாமி மகாராஜ் மற்றும் பூஜ்ஜிய ஈஸ்வர்சரண் சுவாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

**************

AP/RB/KPG



(Release ID: 1883699) Visitor Counter : 144