தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் மேன்மைதங்கிய திருமதி அன்னாலெனா பேர்பாக், ஆணையத்தைப் பார்வையிட இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு வருகை தந்தார்

Posted On: 06 DEC 2022 1:04PM by PIB Chennai

ஜெர்மனியின் வெளியுறவு  அமைச்சர் மேன்மைதங்கிய திருமதி அன்னாலெனா பேர்பாக் தலைமையிலான  ஜெர்மன் பிரதிநிதிகள் குழு, தலைமைத்  தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் திரு அனுப் சந்திர பாண்டேதிரு அருண் கோயல் ஆகியோரை புதுதில்லியில் உள்ள நிர்வச்சன் சதனில் இன்று சந்தித்தது. ஜெர்மன் வெளியுறவு அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  திருமதி அக்னிஸ்கா ப்ரூகர், திரு. தாமஸ் எர்ன்ட்ல், திரு. உல்ரிச் லெக்ட்டே, திரு. ஆண்ட்ரியாஸ் லாரெம், இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் மேன்மைதங்கிய டாக்டர் பிலிப் ஆக்கர்மேன்  மற்றும் வெளியுறவு அலுவலகத்தின் அதிகாரிகள் ந்திருந்தனர்.

இந்தச்  சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய  தலைமைத்  தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார், இந்தியாவின் வரலாற்றுச் சூழல் மற்றும் மரபுகளில்  ஜனநாயக சிந்தனை ஆழமாக வேரூன்றியுள்ளது என்றார். இந்தியத் தேர்தல்களின் அளவைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை அளித்த அவர், 1.1 மில்லியன் வாக்குச் சாவடிகளில் 950 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு அனைவரையும் உள்ளடக்கிய, எளிதில் அணுகக்கூடிய மற்றும் பங்கேற்புடனான  தேர்தல்களை உறுதிசெய்ய 11 மில்லியன் தேர்தல் அலுவலர்களுக்கு  மேற்கொள்ளும்  விரிவான பயிற்சி முறையை ஜெர்மன் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார். ஒவ்வொரு கட்டத்திலும் அரசியல் கட்சிகளின் கருத்துக்களையும் பங்கேற்பையும் இந்தியத் தேர்தல் ஆணையம்  உறுதி செய்கிறது என்று அவர் குறிப்பிட்டார். பொருட்கள் போக்குவரத்து  சவால்களைத் தவிர, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை பாதிக்கும் போலியான சமூக ஊடக விவரிப்புகளின் சீர்குலைக்கும் தாக்கம், பெரும்பாலான தேர்தல் மேலாண்மை அமைப்புகளுக்கு ஒரு பொதுவான சவாலாக வேகமாக வளர்ந்து வருகிறது என்றும் திரு  எஸ் குமார் கூறினார்.

ஆணையத்துடன் உரையாடும் போது, இந்தியாவின் பல்வேறு புவியியல், கலாச்சாரம் மற்றும் வாக்காளர்களின் சவால்களைக் கருத்தில் கொண்டு, உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் இந்தியத் தேர்தல் ஆணைய நிர்வாகத்தின் பரந்த செயல்பாட்டை ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் பாராட்டினார். வாக்காளர்களின் பங்கேற்பு, அரசியல் கட்சிகள்/வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் இயந்திரத் தளவாடங்கள் ஆகிய மூன்று நிலைகளில் பரந்த அளவில் தேர்தல்களை நடத்துவதில் இந்தியத் தேர்தல் ஆணையத் தொழில்நுட்பத்தின் விரிவான பயன்பாடு குறித்து அமைச்சருக்கு விளக்கப்பட்டது. பிரதிநிதிகளுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம்  ஏற்பாடு செய்த இவிஎம் -விவிபேட் செயல்பாட்டின் போது அவர் தனிப்பட்ட முறையில் இவிஎம் மூலம் வாக்களித்தார். தனித்தனி இவிஎம்களின் வலுவான பாதுகாப்பு அம்சங்களையும், சம்பந்தப்பட்ட தேர்தல் நடைமுறைகளின் ஒவ்வொரு கட்டத்திலும், இவிஎம்களைக்  கையாளுதல், இயக்கம், சேமிப்பு, செயல்பாடுகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பங்கேற்புக்கான செயல்முறை ஆகியவற்றில் கடுமையான நிர்வாக நெறிமுறைகளையும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து அவர் கூர்ந்து கவனித்தார்.

இந்தியாவும்  ஜெர்மனியும்ஸ்டாக்ஹோமில் உள்ள சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவி நிறுவனத்திலும்வார்சாவில் உள்ள  ஜனநாயகங்களின் சமூகத்திலும்  உறுப்பினர்களாக உள்ளன. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நிலையான முயற்சி, வெளிநாடுகளில் உள்ள தேர்தல் அதிகாரிகளுடன் நெருக்கமான தேர்தல் ஒத்துழைப்பை வளர்ப்பதுடன் மக்களிடையேயான தொடர்புகளை ஆழப்படுத்துகிறதுகுடிமைக் கல்வி மற்றும் கல்வியறிவு, ஜனநாயகத்திற்கான கல்வி உட்பட, ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் செயல்முறைகளை வலுப்படுத்துகிறது. ஜனநாயகத்திற்கான உச்சிமாநாட்டின் உதவியுடன், இந்தியத் தேர்தல் ஆணையம் 2023 ஆம் ஆண்டு தேசிய வாக்காளர் தினத்திற்கு முன்னதாக 2023 ஜனவரியி  'தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் தேர்தல் ஒருமைப்பாடு' என்ற தலைப்பில் இரண்டாவது சர்வதேச மாநாட்டை ஏற்பாடு செய்யஉள்ளது.

ஜெர்மன் வெளியுறவு அலுவலகம், புதுதில்லியில் உள்ள ஜெர்மன் தூதரகம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

******

AP/SMB/IDS

 


(Release ID: 1881150) Visitor Counter : 179