பிரதமர் அலுவலகம்
அண்மையில் விண்ணில் செலுத்தப்பட்ட இஓஎஸ்-06 செயற்கைக்கோள் அனுப்பிய பிரமிக்க வைக்கும் படங்களை பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
02 DEC 2022 6:01PM by PIB Chennai
அண்மையில் விண்ணில் செலுத்தப்பட்ட புவி கண்காணிப்பு செயற்கைக் கோளான இஓஎஸ்-06, அனுப்பியுள்ள படங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விண்வெளி தொழில்நுட்ப உலகில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றங்கள், சூறாவளிகளை சிறப்பாகக் கணிக்கவும், கடலோரப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் உதவும் என்று பிரதமர் மேலும் கூறியுள்ளார்.
பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"அண்மையில் செலுத்தப்பட்ட இஓஎஸ்-06 செயற்கைக்கோளில் இருந்து பெறப்பட்ட பிரமிக்க வைக்கும் படங்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? குஜராத்தின் சில அழகான படங்களைப் பகிர்கிறேன். விண்வெளி தொழில்நுட்ப உலகின் இந்த முன்னேற்றங்கள், சூறாவளிகளை சிறப்பாகக் கணிக்கவும், நமது கடலோரப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் உதவும்."
இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.
**************
SM/PLM/RS/IDS
(रिलीज़ आईडी: 1880566)
आगंतुक पटल : 265
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam