விவசாயத்துறை அமைச்சகம்

தடுக்க இயலாத இயற்கை அபாயங்களால் ஏற்படும் பயிர் இழப்புக்கு பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விரிவான காப்பீடு வழங்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது

Posted On: 01 DEC 2022 3:14PM by PIB Chennai

தடுக்க இயலாத இயற்கை அபாயங்களால் ஏற்படும் பயிர் இழப்புக்கு பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விரிவான காப்பீடு வழங்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் கூறியுள்ளது.

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் உலகிலேயே 3-வது பெரிய பயிர் காப்பீட்டு திட்டமாகும். இது வரும் ஆண்டுகளில் நம்பர் 1 திட்டமாக மாற வாய்ப்பு உள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் இத்திட்டத்தின் கீழ் சுமார் 5 கோடி விவசாயிகளின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. கடந்த 6 ஆண்டுகளில் இந்த காப்பீட்டு திட்டத்தில் நம்பிக்கை கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

 கடந்த 6 ஆண்டுகளில் விவசாயிகள் ரூ.25,186 கோடி பிரிமியம் செலுத்தியுள்ளனர். 2022, அக்டோபர் 31-ந் தேதி நிலவரப்படி ரூ.1,25,662 கோடி விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

**************

SM/PKV/AG/IDS

 



(Release ID: 1880289) Visitor Counter : 132