தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
53- வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் நிறைவு விழாவில் 2022 ஆம் ஆண்டிற்கான இந்திய திரைப்பட ஆளுமை விருதை மெகா ஸ்டார் சிரஞ்சீவி பெற்றார்
கோவாவில் இன்று நடைபெற்ற 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நிறைவு விழாவில், டோலிவுட்டின் மெகா ஸ்டார், பத்ம பூஷன் விருது பெற்ற சிரஞ்சீவி என்று அழைக்கப்படும் ஸ்ரீ கொனிடேலா சிவசங்கர வர பிரசாத், 2022 ஆம் ஆண்டிற்கான இந்திய திரைப்பட ஆளுமை விருதை பெற்றார்.
ஐ.எஃப்.எஃப்.ஐ, இந்திய அரசு மற்றும் பிரதமருக்கு நன்றி தெரிவித்ததோடு, தனது பெற்றோருக்கும் தெலுங்கு திரையுலகினருக்கும் சிரஞ்சீவி நன்றி தெரிவித்தார். ‘கொனிடேலா சிவசங்கர வர பிரசாத் என்று என்னைப் பெற்றெடுத்த என் பெற்றோருக்கும், சிரஞ்சீவியாக எனக்கு மறுபிறவி கொடுத்த தெலுங்குத் திரையுலகுக்கும் நான் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். சினிமா துறைக்கு நான் வாழ்நாள் முழுவதும் கடன்பட்டிருக்கிறேன்,'' என்றார்.
மாபெரும் விருதைப் பெற்ற சிரஞ்சீவி, அரசியலில் இருந்து திரும்பிய பிறகு தன்னை ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றியையும் தெரிவித்தார். தனக்கு கிடைத்த அனுபவத்திற்கும் ஆதரவிற்கும், அரசு மற்றும் திரைத்துறையினருக்கு சிரஞ்சீவி நன்றியைத் தெரிவித்தார்.
நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக நடித்து மக்கள் மனதில் நீங்க இடம்பிடித்துள்ள சிரஞ்சீவி தெலுங்கில் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் நடித்துள்ளார். அதேபோல் இந்தி, தமிழ் மற்றும் கன்னட மொழிகளிலும் இவர் நடித்துள்ளார்.
************
GS / SRI / DL
(Release ID: 1879666)
Visitor Counter : 143