தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
iffi banner

53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய்தீப் முகர்ஜியின் “அதர் ரே: த ஆர்ட் ஆப் சத்யஜித் ரே” திரையிடல்

53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய பனோரமா  பிரிவில் இயக்குனர் ஜெய்தீப் முகர்ஜியின் ஆவணப்படமான  “அதர் ரே: த ஆர்ட் ஆப் சத்யஜித் ரே” திரையிடப்பட்டது. 

செய்தியாளர்கள் மற்றும் பத்திரிகை தகவல் மையம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘டேபிள் டாக்ஸ்’ நிகழ்வில் பங்கேற்றவர்களுடன்  நடைபெற்ற கலந்துரையாடலின் போது, இயக்குனர் ஜெய்தீப் முகர்ஜி, “மேதையான சத்யஜித் ரே அவர்களின் சிறந்த ஆளுமைத்திறனை அடிப்படையாகக் கொண்டு இந்த சுயசரிதை ஆவணபடத்தை காட்சிப்படுத்தியுள்ளேன். ரே அவர்களின் சிறந்த ஆளுமைத் திறன்களான படம் வரைதல், கைவினைத்திறன், இசையமைப்பாளர், இயக்குனர் போன்ற பன்முக அவதாரங்கள் முழுமையாக இந்த ஆவணப்படத்தில் இடம் பெற்றுள்ளது.  ரே அவர்களின் தனித்துவமான படைப்பாற்றல் திறன் அவருடைய மரபணுவிலேயே இருந்ததற்கான காரணமாக அவருடைய தாத்தா உபேந்திர கிஷோர் ரே சௌத்ரி மற்றும் அவருடைய அப்பா சுகுமார் சென் போன்றவர்களை அடிப்படையாக எடுத்துக் கொள்ளலாம். மேலும் ஜாம்பவான்களான நந்தலால் போஸ் போன்றவர்களிடம் சத்யஜித் ரே அவர்கள் நேரடியாக பயிற்சி அனுபவங்களை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது”. 

“இந்த ஆவணப்படம் குறித்து சத்யஜித் ரே அவர்களிடம் நான் விவாதித்து இருக்கிறேன்.  ஆனால் இதனை சாத்தியப்படுத்துவதற்கு பல தசாப்தங்கள் தேவைப்பட்டது.  கடந்த 2007 ஆண்டில் கொல்கத்தாவில் நடைபெற்ற கண்காட்சி ஒன்றில் இருந்து ரே அவர்களின் வண்ணப்படங்களையும், அவருடைய மற்ற படைப்புகளையும் புகைப்படமாக எடுத்தேன். மேலும் சார் ரிச்சட் அட்டென்பரோ மற்றும் லண்டனில் உள்ள ரே அவர்களின் நண்பர்களிடம் இருந்தும் பல தகவல்களை பெற்றேன்”.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பில் காணலாம்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1878791

**************

AP/GS/RJ/KRS

iffi reel

(Release ID: 1878857) Visitor Counter : 180