தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பவ்டா எஸ்4-ன் முதல் அத்தியாயம் திரையிடப்படுகிறது
53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பவ்டா எஸ்4 ன் முதல் அத்தியாயம் திரையிடப்படுகிறது. இதன் படைப்பாளர் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர்கள் லியர் ராஸ் ,அவி இசச்சாரோஃப் ஆகியோர் முதல் அத்தியாயத்துடன் திரைப்படவிழாவில் கலந்து கொள்கின்றனர்.
2023 இல் நெட்பிளிக்சில் உலகளவில் ஒளிபரப்பாகவுள்ள இந்தத் தொடரின் பிரீமியர் காட்சி, நவம்பர் 27, ஞாயிற்றுக்கிழமையன்று நட்சத்திரங்கள் பெருமளவில் பங்கேற்கும் திருவிழாவில் திரையிடப்படும்.
பவ்டா தொடரின் பிரிமியர் காட்சி திரைப்படவிழாவில் வெளியிடப்படுவது குறித்து படைப்பாளர் லியோர் ராஸ் மற்றும் தயாரிப்பாளர் அவி இசச்சாரோஃப், ஆசிய பிரீமியருக்கு இந்தியா வருவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளனர்.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு. அனுராக் தாக்கூர், "ஒரு கலை முயற்சி வெற்றியடைவதில் எந்த ரகசியமும் இல்லை. இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ,பல்வேறு மொழிகளில் தனித்துவமான கதைகள், அனைத்து பிராந்தியங்கள், இனம் மற்றும் கலாச்சாரங்களைத் தாண்டி கொண்டாடப்படுகின்றன. புதிய கதைகள், ஆக்கபூர்வமான யோசனைகள் மற்றும் புதிய முன்னோக்குகளை உலகிற்கு வழங்குவதற்கான எங்கள் முயற்சி பலனளிக்கிறது’’ என்றார்.
நெட்ஃபிக்ஸ் உலகின் முன்னணி பொழுதுபோக்கு சேவையாகும். 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் 223 மில்லியன் கட்டண உறுப்பினர்களுடன் டிவி தொடர்கள், ஆவணப்படங்கள், திரைப்படங்கள் மற்றும் மொபைல் கேம்களை பல்வேறு மொழிகளில் ஒளிபரப்புகிறது.
*********
MSV/PKV/DL
(Release ID: 1877512)
Visitor Counter : 199