ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

ரபி பருவத் தேவைகளைப் பூர்த்தி செய்ய யூரியா, டிஏபி, எம்ஓபி, என்பிகேஎஸ் மற்றும் எஸ்எஸ்பி உரங்கள் நாட்டில் போதுமான அளவு கையிருப்பில் உள்ளன: ரசாயனம் மற்றும் உரத்துறை விளக்கம்

Posted On: 18 NOV 2022 11:48AM by PIB Chennai

தமிழ்நாட்டின் திருச்சி பகுதி மற்றும் ராஜஸ்தானில் உரத் தட்டுப்பாடு இருப்பதாக சில ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. இத்தகைய செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை. ரபி பருவத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாட்டில் போதுமான அளவு உரங்கள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் தேவைக்கேற்ப உரங்களை அனுப்புகிறது. மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான விநியோகத்தை உறுதி செய்வது அந்தந்த மாநில அரசுகளின் பொறுப்பாகும்.

தேசிய அளவில் உரங்களின் கையிருப்பு கீழ்க்கண்டவாறு உள்ளது:

யூரியா: 2022-23-ஆம் ஆண்டு ரபி பருவத்தில் அகில இந்திய அளவில் யூரியாவின் தேவை 180.18 லட்சம் மெட்ரிக் டன்னாகும். 16.11.2022 வரையிலான தேவை 57.40 லட்சம் மெட்ரிக் டன். ஆனால் அதற்கு எதிராக 92.54 லட்சம் மெட்ரிக் டன் இந்தியாவில் கையிருப்பில் இருப்பதை உரத்துறை அமைச்சகம் உறுதி செய்தது. இந்த காலகட்டத்தில் யூரியா விற்பனை 38.43 லட்சம் மெட்ரின் டன்னாகும். மேலும், தற்போது 54.11 லட்சம் மெட்ரின் டன் மாநிலங்கள் கைவசம் இருப்பில் உள்ளது. இது தவிர கூடுதலாக யூரியா உற்பத்தி நிலையங்களில் 5.03 லட்சம் மெட்ரிக் டன்னும் துறைகமுகங்களில் 5.03 லட்சம் மெட்ரிக் டன்னும் யூரியா தேவையை சமாளிக்க கையிருப்பில் உள்ளன.

 

 

டை அமோனியம் ஃபாஸ்பேட் (டிஏபி): 2022-23-ஆம் ஆண்டு ரபி பருவத்தில் அகில இந்திய அளவில் டிஏ-பியின் தேவை 55.38 லட்சம் மெட்ரிக் டன்னாகும். 16.11.2022 வரையிலான தேவை 26.98 லட்சம் மெட்ரிக் டன். ஆனால் அதற்கு எதிராக 36.90 லட்சம் மெட்ரிக் டன் இந்தியாவில் கையிருப்பில் இருப்பதை உரத்துறை அமைச்சகம் உறுதி செய்தது. இந்த காலகட்டத்தில் டிஏபி விற்பனை 24.57 லட்சம் மெட்ரிக் டன்னாகும். மேலும், தற்போது 12.33 லட்சம் மெட்ரிக் டன் மாநிலங்களின் கைவசம் இருப்பில் உள்ளது. இது தவிர கூடுதலாக டிஏபி உற்பத்தி நிலையங்களில் 0.51 லட்சம் மெட்ரிக் டன்னும் துறைகமுகங்களில் 4.51 லட்சம் மெட்ரிக் டன்னும் டிஏபி தேவையை சமாளிக்க கையிருப்பில் உள்ளது.

மியூரேட் ஆஃப் பொட்டாஷ்(எம்ஓபி): 2022-23-ஆம் ஆண்டு ரபி பருவத்தில் அகில இந்திய அளவில் எம்ஓபி-யின் தேவை 14.35 லட்சம் மெட்ரிக் டன்னாகும். 16.11.2022 வரையிலான தேவை 5.28 லட்சம் மெட்ரிக் டன். ஆனால் அதற்கு எதிராக 8.04 லட்சம் மெட்ரிக் டன் இந்தியாவில் கையிருப்பில் இருப்பதை உரத்துறை அமைச்சகம் உறுதி செய்தது. இந்த காலகட்டத்தில் எம்ஓபி விற்பனை 3.01 லட்சம் மெட்ரிக் டன்னாகும். மேலும், தற்போது 5.03 லட்சம் மெட்ரிக் டன் மாநிலங்களின் கைவசம் இருப்பில் உள்ளது. இது தவிர கூடுதலாக துறைகமுகங்களில் 1.17 லட்சம் மெட்ரிக் டன் எம்ஓபி தேவையை சமாளிக்க கையிருப்பில் உள்ளது.

என்பிகேஎஸ்: 2022-23-ஆம் ஆண்டு ரபி பருவத்தில் அகில இந்திய அளவில் என்பிகேஎஸ்-ன் தேவை 56.97 லட்சம் மெட்ரிக் டன்னாகும். 16.11.2022 வரையிலான தேவை 20.12 லட்சம் மெட்ரிக் டன். ஆனால் அதற்கு எதிராக 40.76 லட்சம் மெட்ரிக் டன் இந்தியாவில் கையிருப்பில் இருப்பதை உரத்துறை அமைச்சகம் உறுதி செய்தது. இந்த காலகட்டத்தில் என்பிகேஎஸ்-ன் விற்பனை 15.99 லட்சம் மெட்ரிக் டன்னாகும். மேலும், தற்போது 24.77 லட்சம் மெட்ரிக் டன் மாநிலங்களின் கைவசம் இருப்பில் உள்ளது. இது தவிர கூடுதலாக என்பிகேஎஸ் உற்பத்தி நிலையங்களில் 1.24 லட்சம் மெட்ரிக் டன்னும் துறைகமுகங்களில் 2.93 லட்சம் மெட்ரிக் டன்னும் என்பிகேஎஸ் தேவையை சமாளிக்க கையிருப்பில் உள்ளது.

எஸ்எஸ்பி: 2022-23-ஆம் ஆண்டு ரபி பருவத்தில் அகில இந்திய அளவில் எஸ்எஸ்பி-யின் தேவை 33.64 லட்சம் மெட்ரிக் டன்னாகும். 16.11.2022 வரையிலான தேவை 14.05 லட்சம் மெட்ரிக் டன். ஆனால் அதற்கு எதிராக 24.79 லட்சம் மெட்ரிக் டன் இந்தியாவில் கையிருப்பில் இருப்பதை உரத்துறை அமைச்சகம் உறுதி செய்தது. இந்த காலகட்டத்தில் எஸ்எஸ்பி-யின் விற்பனை 9.25 லட்சம் மெட்ரிக் டன்னாகும். மேலும், தற்போது 15.54 லட்சம் மெட்ரிக் டன் மாநிலங்களின் கைவசம் இருப்பில் உள்ளது. இது தவிர கூடுதலாக எஸ்எஸ்பி உற்பத்தி நிலையங்களில் 1.65 லட்சம் மெட்ரிக் டன் தேவையை சமாளிக்க கையிருப்பில் உள்ளது.

இது நாட்டின் ரபி பருவ தேவைக்கான யூரியா, டிஏபி, எம்ஓபி, என்பிகேஎஸ் மற்றும் எஸ்எஸ்பி உரங்களின் கையிருப்பு நிலவரங்களாகும். தேவைக்கு அதிகமாகவே இந்த உரங்கள் கையிருப்பில் உள்ளன.

**************

MSV/PLM/KG/KRS

Release ID: 1876929



(Release ID: 1877043) Visitor Counter : 149