பிரதமர் அலுவலகம்

பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்

“புதுமை கண்டுபிடிப்புகளுக்கான நகரம், தொழில்நுட்ப தாயகம், சிந்தனையி்ன் தலைமைத்துவம் உள்ளடக்கியதாக பெங்களூரு திகழ்கிறது”

“இந்தியாவின் புதுமைக் கண்டுபிடிப்பு இளைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப அணுகுமுறை அதிகரிப்பால் எதிர்காலம் மிகப் பிரகாசமாக அமையும்”

“இந்தியாவில் தொழில்நுட்பம் என்பது  சமத்துவம் மற்றும்  அதிகாரம் அளித்தலின் சக்தியாக உள்ளது”

“ஒருங்கிணைப்பு மூலமான புதுமைக் கண்டுபிடிப்புகள் சக்தி மிகுந்ததாக திகழ்கிறது”

“இந்தியாவில் பயனற்றது என்பதற்கு இடமில்லை. முதலீட்டாளர்கள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கப்படுகிறார்கள்”

Posted On: 16 NOV 2022 11:25AM by PIB Chennai

இந்தியாவில் புதுமை கண்டுபிடிப்பு இளைஞர்கள் உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் திறமையை உறுதி செய்துள்ளார்கள் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கருத்துத் தெரிவித்துள்ளார். பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டில் காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றினார்.  

புதுமை கண்டுபிடிப்புகளுக்கான நகரம், தொழில்நுட்ப தாயகம், சிந்தனையி்ன் தலைமைத்துவம் உள்ளடக்கியதாக பெங்களூரு திகழ்கிறது என்று கூறினார். பல ஆண்டுகளாக இந்தியாவின் புதுமை கண்டுபிடிப்புகளுக்கான குறியீட்டில் பெங்களூரு முதலிடம் வகிப்பதாக தெரிவித்தார்.

இந்தியாவின் தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள், ஏற்கெனவே உலகை கவர்ந்துள்ளதாக கூறினார். இந்தியாவின் புதுமைக் கண்டுபிடிப்பு இளைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப அணுகுமுறை அதிகரிப்பால் எதிர்காலம் மிகப் பிரகாசமாக அமையும் என்று பிரதமர் கூறினார்.  உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் திறமையை இந்திய இளைஞர்கள் உறுதி செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். நமது திறமையை உலக நலனுக்காக பயன்படுத்தி வருகிறோம் என்று கூறினார்.

கடந்த 2015ஆம் ஆண்டு உலக புதுமைக் கண்டுபிடிப்புகள் நாடுகளின் பட்டியலில் 81-ம் இடத்தில் இருந்த இந்தியா, 40-ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளதாகக் குறிப்பிட்டார். 2021-ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவின் யுனிகார்ன் புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கியுள்ளதாக கூறினார். 81,000 புத்தொழில் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டதன் மூலம், மூன்றாவது மிகப் பெரிய புத்தொழில்  நிறுவனங்கள் உள்ள நாடாக இந்தியா திகழ்கிறது என்று அவர் தெரிவித்தார். இந்தியர்களின் திறமையால், இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான சர்வதேச நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் ஊக்கப்படுத்தப்படுவதாக கூறினார்.

இந்திய இளைஞர்களுக்கான தொழில்நுட்ப அணுகுமுறை அதிகரித்து வருவது குறித்து விவரித்த பிரதமர், நாட்டில் மொபைல் மற்றும் தரவுப்புரட்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். கடந்த 8 ஆண்டுகளில் அகன்ற அலைவரிசை இணைப்புகள் 60 மில்லியனிலிருந்து 810 மில்லியனாக அதிகரித்துள்ளது என்று கூறினார்.  திறனறி பேசி உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை 150 மில்லியனிலிருந்து 750 மில்லியனாக அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.  நகர்ப்புறங்களைவிட கிராமப்பகுதிகளில் இணையதள வளர்ச்சி, விரைவுப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். அதிநவீன தகவல் தொடர்புடன் புதிய மக்கள் இணைக்கப்படுவதாக திரு மோடி தெரிவித்தார்.  இந்தியாவில் உள்ள ஜனநாயகபூர்வ தொழில்நுட்பத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். மனித சமுதாயத்திற்கு தொழில்நுட்பத்தை எவ்வாறு அளிப்பது என்பது குறித்து இந்தியா ஏற்கெனவே வழிகாட்டியுள்ளதாக அவர் கூறினார். இந்தியாவில் தொழில்நுட்பம் என்பது  சமத்துவம் மற்றும்  அதிகாரம் அளித்தலின் சக்தியாக உள்ளது என்று அவர் கூறினார். உலகின் மிகப் பெரிய சுகாதாரக் காப்பீட்டு திட்டம் குறித்து குறிப்பிட்ட அவர், ஆயுஷ்மான் பாரத் திட்டம், சுமார் 200 மில்லியன் குடும்பங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாக தெரிவித்தார். தொழில்நுட்ப களத்தின் அடிப்படையில் உலகின் மிகப் பெரிய தடுப்பூசி இயக்கமாக கொவிட் தடுப்பூசி  இயக்கம் நடைபெற்றதாக அவர் கூறினார். கல்வித்துறை குறித்து பட்டிலிட்ட அவர், ஆன்லைன் திறந்தவெளிக் கல்வி மூலம் மிகப் பெரிய அளவில் 10 மில்லியன் பேர் கல்வி கற்று இலவச சான்றிதழ் பெற்றுள்ளதாக தெரிவித்தார். மொபைல் போன் தரவுக்கான விலைக்குறைப்பு குறித்து குறிப்பிட்ட பிரதமர், பெருந்தொற்றுக் காலத்தில் இணையதளம் வாயிலாக வகுப்புகளில் பங்கேற்ற ஏழை மாணவர்களுக்கு இது பயனளித்ததாகக் கூறினார்.

இந்தியா தொழில்நுட்பத்தை ஏழ்மைக்கு எதிரான போரில் ஆயுதமாக பயன்படுத்துவதாக பிரதமர் தெரிவித்தார். ஸ்வமிதாக திட்டம் மற்றும் மக்கள் ஆதார் மொபைல் திட்டங்கள் ஏழை மக்களுக்கு உகந்ததாக உள்ளது என்று கூறினார். ஸ்வமிதா திட்டம் சொத்து ஆவணங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு ஏழை மக்கள் கடன் பெற உதவி புரிவதாக தெரிவித்தார். மக்கள் ஆதார் மொபைல் திட்டம் பயனாளர்களின் வங்கிக் கணக்கிற்கு நிதி செலுத்தப்படுவதை உறுதி செய்ததாகவும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு முக்கியமானதாகவும் உள்ளது என்று கூறினார்.  அரசு மின்னணு சந்தை இணையதளம் வெற்றிகரமாக நடைபெற்று வருவது குறிப்பிட்ட பிரதமர், தொழில்நுட்பம், சிறிய வர்த்தகர்கள் பெரிய வாடிக்கையாளரை கண்டறிய உதவியது என்று தெரிவித்தார். அதே நேரத்தில்  ஊழலுக்கான  வழிவகைகளையும் இது குறைத்ததாகக் கூறினார். அதே போல் இணையதளம் வாயிலான ஒப்பந்த புள்ளி நடைமுறைகளுக்கும் தொழில்நுட்பம் உதவியதாக கூறினார். இது திட்டங்களை அதிகப்படுத்தி வெளிப்படைத்தன்மையையும் ஊக்குவித்ததாகவும் தெரிவித்தார்.  அரசு மின்னணு இணையதளம் வாயிலாக ஒரு ட்ரில்லியன் அளவிற்கு கடந்த ஆண்டு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் திரு மோடி கூறினார்.

தடைகளை நீக்குவதன் அவசியம் குறித்து பிரதமர் சுட்டிக்காட்டினார் புதுமை கண்டுபிடிப்புகள் முக்கியம் என்று அவர் தெரிவித்தார். ஆனால், ஒருங்கிணைப்பு மூலம் இது சக்தி மிகுந்ததாக திகழ்கிறது என்று அவர் தெரிவித்தார். தடைகளை நீக்கி ஒருங்கிணைப்பை செயல்படுத்தவும், சேவையை உறுதி செய்யவும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாகக் கூறினார். பகிரப்படும் தளங்களில் எந்தத் தடையும் இல்லை என்று அவர் தெரிவித்தார். பிரதமர் விரைவு சக்தி தேசிய கட்டமைப்புத் திட்டத்திற்கு எடுத்துக்காட்டாகக் கூறிய அவர், அடுத்த சில ஆண்டுகளில், உள்கட்டமைப்புத் துறையில், ரூ.100 ட்ரில்லியன் அளவுக்கு இந்தியா முதலீடு செய்வதாகவும் குறிப்பிட்டார். விரைவுசக்தி திட்டத்தில் மத்திய, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட முடியும் என்று அவர் கூறினார். திட்டங்கள் தொடர்பான தகவல்களைப் பொறுத்தவரை நில உபயோகம் மற்றும் நிறுவனங்கள் குறித்து ஒரே தளத்தில் காணமுடியும் என்று அவர் தெரிவித்தார். அதனால்,  தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும், அதே தரவை காணமுடியும் என்று அவர் கூறினார். இது ஒருங்கிணைப்பை மேம்படுத்தி குறைகள் ஏற்படுத்துவதற்கு முன்பே, தீர்வு காணமுடியும் என்று தெரிவித்தார். இது ஓப்புதல்கள் மற்றும் அனுமதியை துரிதப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவில் பயனற்றது என்பதற்கு இடமில்லை என்றும்  முதலீட்டாளர்கள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கப்படுவதாகவும்  பிரதமர் குறிப்பிட்டார். நேரடி அந்நிய முதலீடு, சீர்திருத்தங்கள், அல்லது ட்ரோன் விதிமுறைகளை தளர்த்துதல், செமி-கன்டக்கடர் துறையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், பல்வேறு துறைகளில் உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டங்கள், அல்லது எளிதாக வர்த்தகம் தொடங்க உகந்த சூழல் அதிகரிப்பு என எது இருந்தாலும் இந்தியா பல சிறந்த காரணிகளைக் கொண்டுள்ளதாக  அவர் கூறினார். “உங்களது முதலீடு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் அதிசயங்களை நிகழ்த்த முடியும். உங்கள் நம்பிக்கையும், நமது தொழில்நுட்ப திறமையும் செயல்பாடுகளை உருவாக்க முடியும். உலகின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நாம் வழிநடத்திச் செல்லும் நிலையில் எங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்” என்று வேண்டுகோள் விடுத்து பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

 

**************



(Release ID: 1876335)

MSV/ IR/ KPG/KRS



(Release ID: 1876522) Visitor Counter : 223