பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாலியில் ஜி-20 மாநாட்டின் போது இத்தாலி பிரதமருடன் பிரதமர் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 16 NOV 2022 2:27PM by PIB Chennai

பாலியில் ஜி-20 உச்சி மாநாட்டின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி இத்தாலி பிரதமர் மேதகு திருமதி ஜியோர்ஜியா மெலோனியை இன்று சந்தித்தார்.

இத்தாலியின் முதல் பெண் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மெலோனிக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். வர்த்தகம் மற்றும் முதலீடு, பயங்கரவாத எதிர்ப்பு, இரு நாட்டு மக்கள் இடையேயான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுபடுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

இரு தலைவர்களும் பரஸ்பர நலன் சார்ந்த, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் தங்களின் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

இந்தியா-இத்தாலி இடையேயான தூதரக உறவின் 75-வது ஆண்டினைக் கொண்டாடுவதையும் அடுத்த ஆண்டு ஜி-20 உச்சிமாநாட்டிற்கு பிரதமர் மெலோனியை வரவேற்பதையும் பிரதமர் மோடி எதிர் நோக்கி இருக்கிறார்.

******

 

(Release ID: 1876408)

 

MSV/SMB/KRS

 


(வெளியீட்டு அடையாள எண்: 1876420) வருகையாளர் எண்ணிக்கை : 236