சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டிஜி லாக்கர் உபயோகிப்பாளர்கள் தற்போது சுகாதார ஆவணங்களை மின்னணு முறையில் சேமித்து அதனை ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்குடன் இணைக்க முடியும்

Posted On: 10 NOV 2022 12:04PM by PIB Chennai

மின்னணு  மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள் பரிமாற்ற தளமான டிஜி லாக்கர், ஆயுஷ்மான் பாரத் மின்னணு இயக்கத்துடன் ஒருங்கிணைக்கும் தனது இரண்டாம் நிலையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. தற்போது அதன் மூலம்  தடுப்பூசி  செலுத்திக் கொண்ட விவரங்கள், மருத்துவரின் சீட்டு, ஆய்வக அறிக்கைகள், நோயாளிகள் வெளியேறும் போது மருத்துவமனை அளிக்கும் விவரங்கள் உள்ளிட்ட  சுகாதார ஆவணங்களை சேமித்து தேவைப்படும்போது அவற்றை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

முன்னதாக, டிஜி லாக்கர் அதன் முதல் நிலை மூலம் ஆயுஷ்மான் பாரத் மின்னணு இயக்கத்தை ஒருங்கிணைந்து ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கை அதன் 13 கோடி உபயோகிப்பாளர்களுக்காக உருவாக்கியது. புதிய ஒருங்கிணைப்பு மூலம் டிஜி லாக்கர் உபயோகிப்பாளர்கள் சுய சுகாதார ஆவணங்கள் செயலியாக பயன்படுத்த முடியும். அத்துடன் ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு வைத்திருப்பவர்கள், ஆயுஷ்மான் பாரத் மின்னணு இயக்கத்தில் பதிவு செய்துள்ள பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களிலிருந்து சுகாதார ஆவணங்களை இணைத்து டிஜி லாக்கர் வழியாக அதனை பெறமுடியும்இந்த செயலி மூலம் உபயோகிப்பாளர்கள் தங்களது பழைய சுகாதார ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யலாம். மேலும் தங்களுடைய ஆவணங்களை அவர்கள், ஆயுஷ்மான் பாரத் மின்னணு இயக்கத்தில் பதிவு செய்துள்ள சுகாதார வல்லுனர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும்.

**************

SM/IR/RS/IDS


(Release ID: 1874921) Visitor Counter : 212