ஜவுளித்துறை அமைச்சகம்
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், பருத்தி மதிப்புச் சங்கிலிக்கான முயற்சிகளைப் பற்றி ஆய்வு மேற்கொள்ள ஜவுளி ஆலோசனைக் குழுவுடன் மூன்றாவது கலந்துரையாடல் கூட்டம்.
Posted On:
08 NOV 2022 2:55PM by PIB Chennai
மத்திய ஜவுளி, வர்த்தகம், தொழில்துறை, நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், பருத்தி மதிப்புச் சங்கிலிக்கான முயற்சிகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்காக, ஜவுளி ஆலோசனைக் குழுவுடன் நேற்று புது தில்லி வாணிஜ்யா பவனில் மூன்றாவது கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தினார்.
இந்திய பருத்திக்கு முத்திரை வழங்கப்படவதற்கான சிறந்த தருணம் இது என்றும், கஸ்தூரி பிராண்டட் தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து ஈர்ப்பையும் உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்திய மத்திய அமைச்சர், இது ‘ஆத்ம நிர்பார் பாரத்’-சுய சார்பு இந்தியா திட்டத்தை நோக்கிய வரவேற்கத்தக்க படியாகும் என்றும் கூறினார். இந்திய பருத்தி கஸ்தூரிக்கு முத்திரை மற்றும் சான்றளிக்கும் பொறுப்பை தன்னகத்தே கொண்டு சுய ஒழுங்குமுறை கொள்கையில் தொழில்துறை முன்னணியில் இருந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை திரு கோயல் சுட்டிக்காட்டினார். மேலும் இந்திய பருத்தி இழைகளின் தரம் மிக முக்கியமானது என்றும் இந்திய தர நிர்ணய அமைப்பு சட்டம் 2016 இன் கீழ் பருத்தியின் தரத்தை
தொழில்நுட்ப அடிப்படையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.
கஸ்தூரி பருத்தியின் தரம், இருப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகளில் பணியாற்றிய தொழில்துறை மற்றும் அதன் பரிந்துரைக்கப்பட்ட அமைப்புகளை மத்திய அமைச்சர் திரு கோயல் பாராட்டினார்.
பருத்தி உற்பத்தியை அதிகரிக்க, நல்ல தரமான பருத்தி விதைகளை வழங்குவது காலத்தின் தேவை என்றும், போர்க்கால அடிப்படையில் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களிலிருந்து சில உறுதியான நடவடிக்கைகள் தேவை என்றும் திரு கோயல் வலியுறுத்தினார். பருத்தியின் உற்பத்தித்திறனை அதிகரிக்க அதிக மகசூல் தரும் பருத்தி விதைகள் மற்றும் உயர் அடர்த்தி நடவு முறை போன்ற புதுமையான வேளாண்மை தொடர்பான மேம்பட்ட தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
*******
MSV/GS/IDS
(Release ID: 1874492)
Visitor Counter : 198